News April 15, 2025
மீண்டும் அணிக்கு திரும்பும் மயங்க் யாதவ்

தனது வேகம் மற்றும் துல்லியமான பந்து வீச்சால் கடந்த சீசனில் அசத்தியவர் மயங்க் யாதவ். இதனால் அவரை லக்னோ அணி ₹11 கோடிக்கு தக்க வைத்தது. ஆனால் காயம் காரணமாக அவர் லக்னோ அணியில் இதுவரை இணையாமல் இருந்தார். தற்போது அவருக்கு காயம் குணமடைந்துவிட்டதால் நாளை லக்னோ அணியுடன் மயங்க் இணைய உள்ளார். 6 போட்டியில் 4 வெற்றியை பதிவு செய்துள்ள LSG-க்கு மயங்க் வருகை மேலும் வலுசேர்க்கும்.
Similar News
News November 30, 2025
எங்கே போனார் சந்தானம்?

பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த சந்தானம், தற்போது என்ன செய்கிறார் என்பதே தெரியவில்லை. கடைசியாக வெளிவந்த, ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் தோல்வியடைந்தது. அதனையடுத்து அவர் ‘தில்லுக்கு துட்டு’ படத்துக்காக அவர் கிரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமாரை சந்தித்து பேசினார் என கூறப்பட்டது. ஆனால், அப்படத்தின் அறிவிப்பும் எதுவும் வெளியாகவில்லை. தோல்வியில் இருந்து விரைவில் மீண்டும் வருவாரா சந்தானம்?
News November 30, 2025
அதிகாரப் பங்கிற்கு வாய்ப்பு இல்லை: விசிக MP

ஒரு வலிமையான கட்சி பலவீனமடையும் போதுதான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சு வரும் என விசிக MP ரவிக்குமார் கூறியுள்ளார். ஆனால் திமுக தற்போது வலிமையான கட்சியாக இருப்பதாகவும், அதனால் அதிகாரப் பகிர்வுக்கான வாய்ப்பு இந்த தேர்தலில் இருக்காது என்றும் அவர் பேசியுள்ளார். மேலும், விசிக தற்போது பலமடங்கு வளர்ந்திருப்பதால் இம்முறை கூடுதல் தொகுதிகளை திமுக கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
News November 30, 2025
BREAKING: விலை தடாலடியாக மாறியது

வார விடுமுறை நாளான இன்று சிக்கன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் (நாமக்கல்) கறிக்கோழி விலை Kg-க்கு ₹3 உயர்ந்துள்ளது. இதன்படி, கறிக்கோழி Kg (உயிருடன்) ₹106-க்கும், முட்டைக்கோழி ₹122-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மொத்த கொள்முதல் விலை குறைந்ததால், TN முழுவதும் சிக்கன் விலை குறைந்துள்ளது. அதேநேரம் முட்டை விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி ₹6.10-க்கு விற்கப்படுகிறது.


