News August 30, 2025
சனிக்கிழமையில் அனுமனின் முழு அருள் கிடைக்க..

சனிக்கிழமையில் அனுமனை வழிபடுவது கூடுதல் நன்மைகள் கொடுக்கும் என்பது ஐதீகம். சனியால் உங்களுக்கு தொல்லைகள் இருக்கும் பட்சத்தில், அதனை நீக்கும் வல்லமை அனுமனுக்கு உண்டு. வீட்டின் அருகில் இருக்கும் அனுமன் கோயிலுக்கு சென்று, 27 வெற்றிலையை மாலையாக அணிவித்து, மனதில் உள்ள கோரிக்கையை அனுமனிடம் வையுங்கள். சனி தொல்லையால் தவிப்பவர்களுக்கு நல்வழியை அனுமன் காட்டுவார். SHARE IT.
Similar News
News August 30, 2025
மூலிகை: மூட்டுவலியை நீக்கும் சித்தரத்தை!

சித்த மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி,
➤சித்தரத்தையை தேனுடன் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல் குறையும்.
➤மூச்சுத்திணறலுக்கு அதிமதுரம், திப்பிலியை சித்தரத்தையை சேர்த்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிடலாம்.
➤உலர்ந்த சித்தரத்தை & அமுக்கரா கிழங்கை தூளாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால் மூட்டுவலி நீங்கும்.
➤சித்தரத்தையை உலர்த்தி, நீரில் கொதிக்கவைத்து பருகினால், வறட்டு இருமல் தணியும். SHARE IT.
News August 30, 2025
நடிகர் விஜய்யை குத்தணும்.. வெடித்த சர்ச்சை

விஜய்யை ‘அவன் இவன்’ என்று சர்ச்சையாக பேசிய நடிகர் <<17558934>>ரஞ்சித்<<>>, மிரட்டலும் விடுத்துள்ளார். விஜய்யின் பேச்சை கேட்டு எனக்கு வெறி வருகிறது என்றும், எனக்கு வர்ற கோபத்துக்கு விஜய்யை ஓங்கி ஒரு குத்து குத்தணும்னு தோணுது என்றும் பேசியுள்ளார். ரஞ்சித் பேச்சு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் இருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவெகவினர் கொந்தளிக்கின்றனர்.
News August 30, 2025
சீமானும் விஜய்யும் போட்டி போடலாம்: தமிழிசை

2026 தேர்தலில் NDA – INDIA கூட்டணி இடையேதான் போட்டி என்று தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேண்டுமானால் சீமானும் விஜய்யும் போட்டி போட்டுக்கொள்ளலாம் என சாடியுள்ளார். மேலும் விஜய்யால் வெற்றியின் பக்கம் வர முடியாது என்பதை ஒவ்வொரு மாநாட்டிலும் நிரூபித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். DMK – TVK இடையேதான் போட்டி என்று விஜய் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.