News March 30, 2025

அன்பு, அமைதி நிலைக்கட்டும்: விஜய் உகாதி வாழ்த்து

image

தெலுங்கு மற்றும் கன்னட சகோதர, சகோதரிகள் அனைவரும் தனது மனமார்ந்த உகாதி வாழ்த்துகள் என நடிகரும், தவெக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார். X தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில் இந்த புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம் நிலைத்து, சகோதரத்துவம் தழைத்தோங்க வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News April 10, 2026

விஜய் ரசிகர்களுக்காகவே ஸ்பெஷல் ஏற்பாடு

image

விஜய்யை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தில் கம்பம், மரம் என உயரமான இடங்களில் ரசிகர்கள் ஏறிவிடுகிறார்கள். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க, சிவகங்கையில் இன்று விஜய் வருவதற்கு முன்னதாக அங்கு சில பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த ஏற்பாடுகளை மேலே கொடுக்கப்பட்ட போட்டோக்களை ஸ்வைப் செய்து பாருங்கள்.

News April 10, 2026

மழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்

image

தமிழகத்தில் ஏப்.16 வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையிலும் அடுத்த 2 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம். இந்நிலையில், இன்றிரவு 7 மணி வரை நீலகிரி, தென்காசி, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க ஊரில் மழை பெய்யுதா?

News April 10, 2026

‘ஜன நாயகன்’ காட்சிகளை ஷேர் பண்ணாதீங்க: KVN

image

‘ஜன நாயகன்’ படத்தின் சில காட்சிகள் லீக்கானது பரபரப்பை கிளப்பியது. இதுபற்றி தயாரிப்பு நிறுவனமான KVN வெளியிட்ட அறிக்கையில், சட்டப்படி விசாரணை தொடங்கியுள்ளதாகவும், குறிப்பிட்ட அந்த காட்சிகளை SM-ல் பகிர்வது சட்டப்படி குற்றம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த சட்டவிரோத செயலுக்கு மக்கள் துணை போக வேண்டாம் எனவும், எதையும் ஷேர் பண்ண வேண்டாமெனவும் KVN கேட்டுக் கொண்டுள்ளது.

error: Content is protected !!