News May 23, 2024
மே 23 வரலாற்றில் இன்று!

➤1430 – கோம்பைன் கலகத்திற்கு உதவிய ஜோன் ஒஃப் ஆர்க் பிரான்சில் கைது செய்யப்பட்டார். ➤1844 – பாரசீக தேசத்தில் பாப் பாபிசம் என்ற மதக்கொள்கையை முகம்மத் ஷிராஸி வெளியிட்டார். ➤ 1929 – மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூனான கார்னிவல் கிட் வெளிவந்தது. ➤1981 – உடுமலை நாராயணகவி மறைந்த நாள். ➤1949 – மேற்கு ஜெர்மன் என்ற நாடு உருவாக்கப்பட்டது. ➤1993 – ஐ.நா. அவையில் எரித்திரியா இணைந்தது.
Similar News
News March 4, 2026
வேலூர் கலெக்டர் ஆபீசில் முக்கிய ஆலோசனை!

வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று (மார்ச்.3) அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு தேர்தல் செலவினங்களை கண்காணிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் சிவசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News March 4, 2026
தவெகவில் அந்த நடிகையா?

விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார் எனக்கூறி மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், விவாகரத்துக்கு முக்கிய புள்ளியாக இருந்த அந்த நடிகையை தவெகவில் இணைத்தால் கட்சிக்கு கூடுதல் வசீகரம் கிடைக்கும், தேர்தல் நேர பிரசாரத்துக்கும் உதவும் என விஜய் திட்டமிட்டதாக வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இது தவறான செய்தி என்று தவெகவினர் கமெண்ட் செய்கின்றனர்.
News March 4, 2026
20 நாளில் வங்கிக் கணக்கில் ₹9000… TN அரசு இன்ப செய்தி

பிப்., மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை ₹3,000+ கோடைகால சிறப்பு நிதி ₹2000 என மொத்தம் ₹5000 கடந்த பிப்.13-ல் வரவு வைக்கப்பட்டது. நேற்று முதியோர், கைம்பெண்களுக்கு ₹1200+ கோடைக்கால சிறப்பு நிதி ₹2,000 என மொத்தம் ₹3200, மாற்றுத் திறனாளிகளுக்கு ₹1500+ ₹2000 என மொத்தம் ₹3500, மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு ₹4000 என 20 நாளில் ஏறக்குறைய <<19286458>>₹8,200 – ₹9000<<>> வரை TN அரசு வழங்கியுள்ளது.


