News April 29, 2025
மே 1 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

மே 1 தொழிலாளர்கள் தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் ஹோட்டல்களில் மது விற்பனை இருக்காது. அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News November 26, 2025
கோச் சொல்லத்தான் முடியும், வீரர்கள்தான் விளையாடணும்..

இந்திய அணியின் மோசமான ஆட்டத்திற்கு பல தரப்பில் இருந்தும் கம்பீர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அணி வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால் கோச்சை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என கம்பீருக்கு ஆதரவாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். அறிவுரை வழங்குவதே கோச்சின் வேலை, வீரர்கள் தான் விளையாட வேண்டும் என கூறிய அவர், கம்பீர் தனது வேலையை சரியாகவே செய்கிறார் என குறிப்பிட்டார்.
News November 26, 2025
நான் பிரதமராக உயர இதுவே காரணம்: மோடி நெகிழ்ச்சி

அரசியலமைப்பு தினத்தையொட்டி PM மோடி மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தன்னை போன்ற எளிய குடும்பத்தை சேர்ந்தவர் PM ஆனது அரசியலமைப்பு சட்டத்தால்தான் என்ற அவர், அரசமைப்புதான் கனவு காணும் சக்தியையும், அதை நோக்கி உழைக்கும் வலிமையும் அளிக்கிறது என கூறியுள்ளார். மேலும், வலுவான ஜனநாயகத்தின் அடித்தளமாக இருக்கும் அரசியலமைப்பில் உள்ளவற்றை எப்போதும் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News November 26, 2025
BREAKING: பாதி வழியிலேயே திரும்பினார் செங்கோட்டையன்

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்திலிருந்து காலை 8:30 மணிக்கு செங்கோட்டையன் புறப்பட்டார். இதைப்பார்த்த செய்தியாளர்கள், கேமராவுடன் அவரின் காரை பின்தொடர்ந்து சென்றனர். இதையறிந்த உடனே பாதி வழியிலேயே 8:45 மணிக்கு மீண்டும் வீட்டுக்கு காரை திருப்பினார். MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இன்றே விஜய்யை அவர் சந்திப்பார் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.


