News May 17, 2024
மே 17: வரலாற்றில் இன்று

➤1792 – நியூயார்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது.
➤1805 – முகமது அலி எகிப்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
➤1814 – மொனாக்கோவின் ஆட்சி பிரான்சிடம் இருந்து ஆஸ்திரியாவுக்கு கைமாறியது.
➤2004 – அமெரிக்காவில் முதலாவது சட்டபூர்வ ஒருபால் திருமணம் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் நடைபெற்றது.
➤2014 – வடக்கு லாவோசில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.   
Similar News
News November 1, 2025
FI பட ரீமேக் சாத்தியமா? அஜித் கொடுத்த அப்டேட்

ஜனவரியில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வரும் என்று அஜித் கூறிவிட்டார். அதேநேரம், ‘F1’ பட ரீமேக் குறித்தும் அவர் பேசியுள்ளார். ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், இதனை ரீமேக் செய்வதன் மூலம் F1 ரேஸிங்கை பிரபலப்படுத்த முயன்றால், அதுவே தனக்கு மகிழ்ச்சி என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதனால் ‘தல கண்டிப்பா F1 ரீமேக் பண்ணுங்க’ என்று அஜித் ரசிகர்கள் கோரி வருகின்றனர்.
News November 1, 2025
வங்கிகளுக்கு புதிய டொமைன்… இன்றோடு கெடு முடிகிறது

சைபர் குற்றங்களை தடுக்கும் நோக்கில், வங்கிகள் தங்களின் இணையதள முகவரியை .bank.in என்ற டொமைனுக்கு மாற்றியுள்ளன. இதற்கு ரிசர்வ் வங்கி விதித்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. SBI, PNB,கனரா ஆகிய பொதுத்துறை வங்கிகளும், HDFC, ICICI, AXIS, Kotak Mahindra உள்ளிட்ட தனியார் வங்கிகளும் புதிய டொமைனுக்கு மாறிவிட்டன. ஆனால், சில தனியார் வங்கிகள் மட்டும் இன்னும் .com என்ற முகவரியில் தொடர்கின்றன. உங்க பேங்க் எப்படி?
News November 1, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 506  ▶குறள்: அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி. ▶பொருள்: நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள். 


