News May 14, 2024

மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்

image

அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள ஆசிரியர் தேர்வு வாரியம், இது தொடர்பான விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம் எனத் தெரிவித்துள்ளது.

Similar News

News April 1, 2026

செங்கை: தங்க மோதிரம், பைக் தருவேன்; அள்ளி விட்ட அதிமுக வேட்பாளர்!

image

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இலத்தூர் அதிமுக ஒன்றியக் கழக நிர்வாகிகள் மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் (மார்ச் 30) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அதிகவுக்கு வாக்குகள் பெற்று தரும் கிளைக் கழக செயலாளர்களுக்கு தங்க மோதிரமும், புல்லட் பைக் வழங்குவேன் என அதிமுக வேட்பாளர் ராஜசேகர் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

News April 1, 2026

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கிடுகிடு உயர்வு!

image

மாதத்தின் முதல் நாளிலேயே சர்வதேச சந்தையில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து மக்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. தற்போது 1 அவுன்ஸ் (28g) தங்கம் $170 (இந்திய மதிப்பில் ₹15,877) உயர்ந்து $4,696-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை $5 வரை உயர்ந்து 1 அவுன்ஸ் $74.88-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால், நம்மூர் சந்தையில் இன்று தங்கம் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது.

News April 1, 2026

இன்று அமலுக்கு வந்த புதிய வருமான வரி விதிமுறைகள்

image

கடந்த ஆண்டு மத்திய அரசு புதிய வருமான வரிச் சட்டத்தை அறிவித்தது. அந்த வரி மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. 64 ஆண்டுகள் பழமையான வருமான வரி சட்டத்திற்கு மாற்றாக வரும் புதிய சட்டத்தால், வரி விதிப்பு முறை எளிமையாகும் என்றே பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில், இந்த புதிய வருமான வரி சட்டத்தின் முக்கிய அம்சங்களை அறிய மேலே உள்ள போட்டோவை இடது புறமாக Swipe செய்யவும்.

error: Content is protected !!