News May 16, 2024
மே 16 : வரலாற்றில் இன்று

➤1568 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி அரசி இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினார்.
➤1667 – யாழ்ப்பாணத்தில் வாக்கிய பஞ்சாங்கம் ராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது.
➤2005 – குவைத் பெண்களுக்கான வாக்குரிமையை வழங்கியது.
➤2003 – மொரோக்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 33 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
➤2006 – நியூசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
Similar News
News November 11, 2025
BREAKING: அலறப்போகும் பாகிஸ்தான்.. மீண்டும் போர்?

‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் தொடருவதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. டெல்லி குண்டுவெடிப்பை தொடர்ந்து, அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது. நாளை மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், டெல்லி சம்பவத்திற்கு பதிலடியாக, பாக்., எல்லையில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என கூறப்படுகிறது.
News November 11, 2025
காந்தா படத்துக்கு சிக்கல்

நடிகர் MKT பாகவதரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் காந்தா. இந்த படத்துக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இப்படத்தை எடுப்பதற்கு முன் வாரிசுகளின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என பாகவதரின் மகள்வழி பேரன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர் துல்கர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
News November 11, 2025
Delhi Blast: சகோதரியிடம் 3 நாள் முன்பு பேசிய உமர்

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் டாக்டர் உமர் முகமதுவின் பெயர் இருப்பதை கேட்டு அதிர்ச்சியடைந்தோம் என்று அவரது சகோதரி முசாமிலா கூறியுள்ளார். ஃபரீதாபாத்தில் வசித்து வந்த உமருடன் 3 நாள்களுக்கு முன் பேசினேன். அவர் அப்படிப்பட்ட நபர் அல்ல; அவருக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும் என கூறிய முசாமிலா, அடிலை (மற்றொரு சந்தேக நபர்) எங்களுக்குத் தெரியாது; பெயரை மட்டும் கேள்விப்பட்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.


