News April 5, 2025
‘ஜனநாயகன்’ படத்திற்கு மே 15 டார்கெட்

‘ஜனநாயகன்’ ஷூட்டிங்கை மே 15ஆம் தேதிக்குள் முடிக்க இயக்குநர் எச்.வினோத் திட்டமிட்டுள்ளார். கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க தயாராகும் வினோத், அதையடுத்து பாடல் காட்சிகளை படமாக்க வெளிநாடு செல்ல முடிவு செய்துள்ளாராம். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்ததும், ஜூன் மாதம் முதல் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடுகிறார். தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் சென்று மக்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News November 21, 2025
கில்லுக்கு இன்று பிட்னஸ் டெஸ்ட்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் கழுத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சுப்மன் கில் பாதியில் வெளியேறினார். இதனால் கவுகாத்தியில் நடக்கும் 2-வது டெஸ்டில் அவர் விளையாடுவதும் கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் அவருக்கு இன்று பிட்னஸ் டெஸ்ட் எடுக்கப்படுகிறது. இதன் முடிவில் கில் நாளை தொடங்கும் 2-வது டெஸ்டில் விளையாடுவாரா, மாட்டாரா என்பது தெரியவரும்.
News November 21, 2025
ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார் PM மோடி

தென்னாப்பிரிக்காவில் இன்று தொடங்கும் ஜி20 மாநாட்டில் PM மோடி பங்கேற்கிறார். 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், 3 அமர்வுகளில் PM மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலையான பொருளாதார வளர்ச்சி, பருவநிலை மாற்றம், எதிர்கால தொழில்நுட்பம் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. மாநாட்டிற்கு மத்தியில், சில தலைவர்களுடன் PM மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 21, 2025
சர்வதேச சந்தையில் தங்கம் விலை மேலும் குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. தங்கம் 1 அவுன்ஸ்(28g) $16.32 சரிந்து $4,065-க்கும், வெள்ளி(1 அவுன்ஸ்) $0.83 குறைந்து $50.74-க்கும் விற்பனையாகிறது. நேற்று(நவ.20) சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் மந்த நிலை நீடித்ததால் நம்மூர் சந்தையில் சவரனுக்கு ₹800 குறைந்தது. இன்றும் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


