News May 7, 2025
மேக்ஸ்வெல் IPL-ல் இருந்து வெளியேறினார்

PBKS வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியிருப்பதாக அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் அறிவித்துள்ளார். அவருக்கு கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் ஐயர் தெரிவித்தார். ஆனால், அவருக்கு பதிலாக வேறு எந்த வீரரையும் அந்த அணி இன்னும் தேர்வு செய்யவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 27, 2025
தொண்டாமுத்தூர்: RIP ‘ரோலக்ஸ்’

தொண்டாமுத்தூர் பகுதியில் அக்.17-ம் தேதி யானை பிடிக்கப்பட்டு 2 வாரங்களுக்கு மேல் பராமரிக்கப்பட்ட நிலையில் நவ.12-ம் தேதி மந்திரிமட்டம் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. “ரோலக்ஸ்” காட்டு யானையை தினமும் ரேடியோ சிக்னல் வைத்து, நேரில் பார்த்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அங்கிருந்த ஓடையில் தண்ணீர் குடிக்க சென்ற போது வழுக்கி விழுந்தது. இதில் யானை இறந்து இருப்பது தெரியவந்தது.
News November 27, 2025
LK 7: லாக் செய்த லோகேஷ்

‘கூலி’ பட தோல்விக்கு பிறகு, அருண் மாதேஸ்வரனின் ‘DC’ படத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்து வருகிறார். இந்நிலையில், ‘LK 7′ என்ற ஹேஷ்டேக்குடன் அவரது உதவி இயக்குநர், இன்ஸ்டாவில் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். இப்போட்டோ வைரலாகவே, ‘கைதி 2’ பட ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகிடுச்சி என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், இது வேறு படத்திற்கான இயக்குநர் குழுவாக கூட இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
News November 27, 2025
KAS மனவருத்தத்தில் இருந்தார்: TTV தினகரன்

அதிமுகவில் இருந்து நீக்கியதில் இருந்தே செங்கோட்டையன் மனவருத்தத்தில் இருந்ததாக TTV தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் செங்கோட்டையனை கொங்கு நாட்டு தங்கம் என்றுதான் சொல்வார்கள் என கூறிய TTV, கட்சியில் பம்பரம்போல் செயல்படுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், செங்கோட்டையன் விஜய் பக்கம் செல்வது யாருக்கு பின்னடைவு என்பது தமிழக மக்களுக்கு தெரியும் என்றும் EPS-ஐ மறைமுகமாக சாடினார்.


