News February 21, 2025

அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிக்கும்: IMD

image

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று IMD தெரிவித்துள்ளது. அதாவது, நாளையும், நாளை மறுதினமும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். ஆனால், அதற்கடுத்த 2 நாள்களுக்கு இயல்பை ஒட்டி காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Similar News

News February 22, 2025

புதிதாக 60 கட்சிகள் உதயம்

image

2024 – 2025இல் நாடு முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயமாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், தமிழகத்திலிருந்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், நமது உரிமை காக்கும் கட்சி, மக்கள் முரசு கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் தற்போது 6 தேசிய கட்சிகள், 58 மாநிலக் கட்சிகள் மற்றும் 2,763 அங்கீகரிக்கப்படாத கட்சிகள் உள்ளது கவனிக்கத்தக்கது. புதிய கட்சிகள் உதயம் குறித்து உங்கள் கருத்து என்ன?

News February 22, 2025

செவ்வாய் கிரகத்தில் வீடு: சென்னை ஐஐடி சாதனை

image

செவ்வாய் கிரகத்தில் வசிக்க முடியுமா? என்ற ஆய்வுகளில் அமெரிக்காவும், இந்தியாவும் தீவிரமாக இறங்கி இருக்கின்றன. அதற்கான சாத்தியக்கூறுகள் அமைந்தால் அங்கு கட்டுமானங்களை எழுப்ப பிரத்யேக கான்கிரீட்களை உருவாக்கி சாதித்திருக்கிறது சென்னை ஐஐடி. நீரின்றி தயாரிக்கப்பட்டதுதான் இதன் தனித்துவமே. இதை வைத்து செவ்வாயில் வீடு கட்டினால் எப்படி இருக்கும்? அதை AI தொழில்நுட்பம் நம் கண்களுக்கு விருந்தளித்திருக்கிறது.

News February 22, 2025

டான்செட் தேர்வு: பிப்.26 வரை அவகாசம் நீட்டிப்பு

image

M.E., M.TECH., M.PLAN, M.ARCH., படிப்புகளில் சேருவதற்கான CEETA-PG மற்றும் MBA, MCA படிப்புகளில் சேருவதற்கான டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்.26 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. <>http://tancet.annauniv.edu<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா யூனிவர்சிட்டி அறிவித்துள்ளது. இதே முகவரியில் தேர்வு கட்டணம் செலுத்தி, ஹால் டிக்கெட்டையும் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

error: Content is protected !!