News June 8, 2024
டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி நாளை பொறுப்பேற்க உள்ளார். தெற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் நாளை டெல்லியில் கூட உள்ளனர். அதனால், ஜி-20 மாநாட்டிற்கு வழங்கப்பட்டதை போல், டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 5 கம்பெனி துணை ராணுவப்படை வீரர்கள், ஸ்னைப்பர்கள், கமாண்டோக்கள் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், ட்ரோன்கள் பறக்கவிடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 24, 2025
BREAKING: தங்கம் விலை குறைந்தது

கடந்த ஒரு வாரமாக உச்சத்தில் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்ததால், நகை பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ₹40 குறைந்து ₹10,600-க்கும், சவரனுக்கு ₹320 குறைந்து ₹84,800-க்கும் விற்கப்படுகிறது. கடந்த 2 நாளாக காலை, மாலை என இருமுறை விலை உயர்ந்த நிலையில், இன்று மாலை விலை குறையுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
News September 24, 2025
CM இடது கையால் சமாளித்து வருகிறார்: உதயநிதி

திமுக கூட்டணி உடைந்துவிடாதா என ஏங்கி பல்வேறு சதி திட்டங்களை பாஜக செயல்படுத்தி வருவதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இவற்றை எல்லாம் CM ஸ்டாலின் தனது இடது கையால் சமாளித்து வருவதாகவும், இதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அதிமுகவில் ஓபிஎஸ், தினகரன், சசிகலா, தீபா, தீபாவின் டிரைவர், செங்கோட்டையன் என பல அணிகள் உள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
News September 24, 2025
அனிருத், மணிகண்டனுக்கு கலைமாமணி விருது

2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, அனிருத், சாண்டி மாஸ்டர், இயக்குநர் லிங்குசாமி, பாடலாசிரியர் விவேகா, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி ஸ்வேதா மோகன், நடிகர் மணிகண்டன் ஆகியோருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாடகர் ஜேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.