News March 30, 2025

இமாச்சலில் பயங்கர நிலச்சரிவு: 6 பேர் பலி

image

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் நேரிட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலியாகினர். நிலச்சரிவு காரணமாக குலுவில் உள்ள மணிகரன் குருத்வாரா பார்க்கிங் அருகே மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதில் அங்கு இருந்த 6 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 5 பேர் பலத்த காயமடைந்தனர். தகவலின்பேரில் மீட்புப் படையினர் சம்பவ இடம் சென்று மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News January 15, 2026

பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்து டிரம்ப் அதிரடி முடிவு!

image

உலகம் முழுவதும் 75 நாடுகளுக்கான விசா நடைமுறையை வரும் 21-ம் தேதி முதல் நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க மக்களுக்கு சேர வேண்டிய நலத்திட்டங்களால் வெளிநாட்டினர் அளவுக்கு அதிகமாக பயன்பெறுவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வங்கதேசம், ரஷ்யா, ஈரான், குவைத் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடாக கருதப்பட்ட பாகிஸ்தான் உள்பட பல நாடுகள் இப்பட்டியலில் உள்ளன.

News January 15, 2026

IND vs PAK: உலகெங்கும் எகிறிய மவுசு!

image

டி20 WC-யில் IND vs PAK மோதும் போட்டி பிப்.15-ம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்பனை தளமான BookMyShow செயலிழந்தது. பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் முன்பதிவு செய்ய முண்டியடித்ததால் சர்வர்கள் செயலிழந்துள்ளன. இது, இப்போட்டிக்கு உலக அளவில் இருக்கும் எதிர்பார்ப்பை காட்டுவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

News January 15, 2026

டெல்லியில் மனைவியுடன் SK பொங்கல் கிளிக்ஸ்

image

டெல்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடந்த பொங்கல் விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். அதன்போது, கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை, ‘முதல் முறையாக டெல்லியில் பொங்கல் கொண்டாட்டம்’ என்ற கேப்ஷனோடு ஆர்த்தி சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பாரம்பரிய உடையில் இந்த கியூட் கப்பிள்ஸ் எப்படி இருக்காங்க கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!