News January 21, 2025

துருக்கியில் பயங்கர தீ விபத்து.. 66 பேர் பலி

image

துருக்கியின் போலு மாகாணத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த தீ விபத்தில் சிக்கி, 66 பேர் உயிரிழந்துள்ள சோகம் நடந்துள்ளது. இன்று அதிகாலை அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த கோர விபத்து நடந்ததாகவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அமைச்சர் அலி ஏர்லிகயா தெரிவித்துள்ளார். மேலும், விபத்து நடந்த போது, அந்த ஹோட்டலில் 234 பேர் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

Similar News

News March 9, 2026

BREAKING: அதிமுக கூட்டணியில் இணைந்தார்

image

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய உள்ளதாக அதிமுக கூறியிருந்தது. அந்த வகையில் தென்னிந்திய தொழிலாளர் மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் AK மூர்த்தி EPS-ஐ நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை அதிமுகவுக்கு தெரிவித்துள்ளார். அவருக்கு சால்வை அணிவித்து EPS வரவேற்றார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

News March 9, 2026

BREAKING: செந்தில் பாலாஜிக்கு CBI சம்மன்

image

கரூர் வழக்கில் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு CBI சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், சம்மனை அவர் வாங்க மறுத்துவிட்டதாக CBI தரப்பில் கூறப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜியே காரணம் என ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதுகுறித்து விசாரிக்க CBI முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, நாளை டெல்லியில் விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பியிருந்தது கவனிக்கத்தக்கது.

News March 9, 2026

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி நாளை(10.3.2026) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் நாளை இயங்காது. அதேநேரம், அரசு பொதுத்தேர்வுகள் தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் 14-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகும்.

error: Content is protected !!