News August 18, 2024
2,800 உக்ரைன் வீரர்கள் கொன்று குவிப்பு?

2,800க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்களை தாக்குதல் நடத்தி கொன்று விட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதிக்குள் பல கி.மீ. தூரத்துக்கு உக்ரைன் படை ஊடுருவியுள்ளது. இதையடுத்து, அவர்கள் மீது 6ஆம் தேதி முதல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 220 பேரை கொன்றுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. ஆனால் உக்ரைன் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
Similar News
News August 22, 2025
BREAKING: தங்கம் விலை குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக.22) சவரனுக்கு ₹120 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,215-க்கும், சவரன் ₹73,720-க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹400 அதிகரித்திருந்த நிலையில், இன்று மீண்டும் சரிவைக் கண்டுள்ளது.
News August 22, 2025
திடீர் ஓய்வை அறிவித்த இந்திய சுழற்பந்து வீச்சாளர்

சுழற்பந்து வீச்சாளர் கௌஹர் சுல்தானா(37) அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். 2008-ம் ஆண்டு அறிமுகமான இவர், 50 ODI போட்டிகளில் 66 விக்கெட்களும், 37 T20 போட்டிகளில் 29 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். மேலும், 2009 & 2013 ODI WC, 3 T20 WC தொடர்களிலும் விளையாடியுள்ளார். 2024 & 2025 WPL தொடர்களில் UP வாரியர்ஸ் அணியில் சிறப்பான ஆட்டத்தை சுல்தானா வெளிப்படுத்தி இருந்தார்.
News August 22, 2025
உங்க செல்போனில் உடனே இதை செக் பண்ணுங்க

பல போன்களின் Calling Interface மாற்றப்பட்டுள்ளது. அதாவது, முன்னர் வரும் அழைப்பை Attend அல்லது Reject பண்ண, மேலே அல்லது கீழே Swipe செய்வோம். இது தற்போது, இடது- வலது புறமாக Swipe செய்யும் வகையில் மாறியுள்ளது. Realme, Oneplus, Moto, Oppo, Vivo போன்ற போன்களில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பயனாளர்கள் வேண்டுமென்றால், பழைய படி மேலே- கீழே Swipe செய்யும் வகையிலும் மாற்றிக் கொள்ளலாம்.