News February 26, 2025

‘மாஸ்க்’ பர்ஸ்ட் லுக் வெளியீடு!

image

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் புதிய படத்திற்கு ‘மாஸ்க்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் விக்ரனன் இயக்கும் இப்படத்தில் நெகட்டிவ் ரோலில் ஆண்ட்ரியாவும், கதாநாயகியாக தெலுங்கு நடிகை ருஹானி ஷர்மாவும் நடிக்கின்றனர். GV பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியானது. அதில், கையில் துப்பாக்கியுடன் ஆண்ட்ரியா கவினை முறைத்துப் பார்த்தபடி நிற்கிறார்.

Similar News

News March 24, 2026

கூட்டணி நலனே முக்கியம்: பிரேமலதா முடிவில் மாற்றம்

image

கூட்டணி நலனுக்காக தொகுதிகளின் எண்ணிக்கையை விட்டுக் கொடுக்க தயார் என பிரேமலதா தெரிவித்துள்ளார். முன்னதாக, தேமுதிக நிச்சயம் இரட்டை இலக்கத்தில் போட்டி; கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம் என கூறி வந்த நிலையில், அவர் திடீரென முடிவை மாற்றியுள்ளார். <<19463210>>விசிகவுக்கு 8 தொகுதிகள்<<>> ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இரவு பிரேமலதா, ஸ்டாலினை சந்திக்க உள்ளார். அப்போது தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

News March 24, 2026

சுந்தர் சி வாழ்க்கையை திருப்பி போட்ட விஜய் படம்

image

விஜய்யின் ஆரம்பகாலத்தில் அவரது ஒரு படத்தின் ப்ரிவியூவை பார்த்துவிட்டு இதெல்லாம் கண்டிப்பா ஓடாது என்று சுந்தர் சி நினைத்தாராம். ஆனால் அந்த படத்தை ரிப்பீட் மோடில் கண்டு மக்கள் கொண்டாடினர் என கூறியுள்ளார். ஆடியன்ஸ்க்காகவே படம் எடுக்க வேண்டும் என்பதை கற்பித்த அப்படமும், படத்தின் நாயகனும் அதன்பின் தனக்கு குருநாதனாக மாறியதாகவும் பேசியுள்ளார். அது 1994-ல் வெளியான ’ரசிகன்’ திரைப்படம்; 175 நாள்கள் ஓடியது.

News March 24, 2026

பாஜக களமிறங்க விரும்பும் தொகுதிகள்

image

NDA கூட்டணியில் பாஜக போட்டியிட உள்ள 27 தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. சென்னையில் வேளச்சேரி, துறைமுகம், மயிலாப்பூர் தொகுதிகளை குறிவைத்துள்ளது. அத்துடன் கொங்குவில் திருச்செங்கோடு, அந்தியூர், திருப்பூர் தெற்கு, அரவக்குறிச்சி, ராசிபுரம், குன்னூர், மொடக்குறிச்சி, கோவை வடக்கு ஆகிய தொகுதிகளை பெற பாஜக விரும்பியுள்ளது. அதில் மதுரை தெற்கு, பத்மநாபபுரம், விளவங்கோடு ஆகிய தொகுதிகளும் உள்ளன.

error: Content is protected !!