News March 6, 2025
திருப்பதியில் இனி மசால் வடை

திருப்பதி என்றாலே லட்டுதான். ஆனால், இனி மசால் வடையும் கிடைக்குமாம். அட ஆமாங்க, தினசரி நடக்கும் அன்னதானத்தில் தான் மசால் வடை பரிமாறப்படுகிறது. சோதனை முயற்சியாக இந்தத் திட்டத்தை தேவஸ்தான அறங்காவலர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அன்னதானம் சாப்பிட அமர்ந்திருந்த பக்தர்களின் இலைகளில் மசால் வடையும் பரிமாறப்பட, கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கம் எழுப்பி பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Similar News
News March 6, 2025
பாஜகவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் உதவி: பினராயி

பாஜகவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் மறைமுகமாக உதவுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவை எதிர்க்கும் பிராந்திய கட்சிகளிடம் காங்கிரஸ் திமிர்பிடித்த அணுகுமுறையை கடைபிடிப்பதாகவும், இது அவர்களின் ஆதிக்க மனநிலை இன்னும் மாறவில்லை என்பதையே காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டின் மதச்சார்பற்ற வாக்காளர்கள் எப்படி அவர்களை நம்புவார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 6, 2025
தக்காளி விலை கிலோ வெறும் ₹4

தமிழகத்தின் பல இடங்களில் தக்காளி விலை இதுவரை இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது. கோவையில் ஒரு கிலோ தக்காளி வெறும் ₹6-க்கு விற்பனையாகிறது. ஆனால், அதைவிட மிக குறைவாக திண்டுக்கலில் வெறும் ₹4-க்கு விற்கப்படுகிறது. அதையும் வாங்க ஆள் இல்லாததால் தக்காளிகளை சாலையோரம் கொட்டி விட்டு, விவசாயிகள் வேதனையுடன் செல்கின்றனர். அதிக விளைச்சல், வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை குறைந்துள்ளது.
News March 6, 2025
சென்னை கோட்டத்தில் 2024 இல் ரயில் மோதி 696 பேர் பலி

சென்னை கோட்டத்தில் மட்டும் கடந்த 2024ஆம் ஆண்டில் ரயில்கள் மோதி 696 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து தெற்கு ரயில்வே கோட்ட உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ”2024இல் மட்டும் ரயில்கள் மோதியும், ரயில்களில் இருந்து தவறி விழுந்தும் 1,196 பேர் உயிரிழந்துள்ளனர்” என்றார். இதில் அதிகபட்சமாக சென்னை கடற்கரை- விழுப்புரம் தடத்தில் 500 பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.