News April 2, 2025
ஏப்ரல் 8இல் விலை உயர்வு.. தேதி குறித்த மாருதி சுசூகி

கார்களின் விலையை வரும் 8ஆம் தேதி உயர்த்த இருப்பதாக மாருதி சுசூகி அறிவித்துள்ளது. உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டி பிப்ரவரியில் விலையை மாருதி சுசூகி உயர்த்தியது. இதே காரணத்திற்காக பிராங்ஸ் மாடல் கார் விலை ரூ.2,500, டிசைர் எஸ் விலை ரூ.3,000, XL6, எர்டிகா விலை ரூ. 12,500, வேகன் ஆர் விலை ரூ.14,000, இகோ விலை ரூ.22,500, கிரான்ட் விடாரா விலை ரூ.62,000 என உயர்த்த இருப்பதாக கூறியுள்ளது.
Similar News
News January 9, 2026
‘மகன் மீண்டும் வருகிறான்’ 62 வயதில் கர்ப்பமான பெண்!

சீனாவின் ஜிலின் மாகாணத்தை சேர்ந்த 62 வயது பெண் ஒருவர், தனது ஒரே மகனை இழந்த சோகத்தில் இருந்து மீள IVF முறையில் மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். வயிற்றில் வளரும் குழந்தை, தனது மகனின் மறுபிறவி என்று நம்பும் அவரின் வீடியோக்கள் SM-ல் விவாதத்தை கிளப்பியுள்ளன. பாசம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த வயதில் இது தேவையா என்றும், ஆரோக்கியம் முக்கியமல்லவா எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
News January 9, 2026
புயல் சின்னம்.. 13 மாவட்டங்களில் மழை அலர்ட்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்றிரவு 10 மணி வரை, அரியலூர், செங்கை, சென்னை, கடலூர், காஞ்சி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாம். கவனம் மக்களே!
News January 9, 2026
நாளை பள்ளிகள் விடுமுறை இல்லை.. கலெக்டர்கள் அறிவிப்பு

சென்னையைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலும் நாளை(சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மழை விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை பாடவேளையை பின்பற்றி வகுப்புகளை நடத்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்களே, ரெடியா இருங்க!


