News November 24, 2024
சரிந்தது மாருதி ஆல்டோ விற்பனை

குறைந்த விலைக்கு கார் வாங்க வேண்டும் என்று விரும்புவோரின் முதல் தேர்வு மாருதி சுஜூகியின் ஆல்டோ காராகவே இருக்கும். விற்பனையில் தொடர்ந்து சாதனை படைத்த இக்கார்களுக்கு தற்போது இந்தியர்கள் இடையே மவுசு குறைந்து வருவதாக கூறப்படுகிறது. ஜனவரியில் 12,395ஆக இருந்த விற்பனை, அக்டோபரில் 8,548ஆக சரிந்து உள்ளது. 2023 அக்டோபரில் 11,200 விற்பனையானது. நீங்க என்ன கார் வச்சிருக்கீங்க. கீழே பதிவிடுங்க.
Similar News
News November 26, 2025
கோவைக்கு NO, புனேவுக்கு YES.. மீண்டும் மெட்ரோ சர்ச்சை!

புனே மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ₹9,858 கோடி மதிப்பீட்டில் இத்திட்டப் பணிகள் அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், கோவை, மதுரை மெட்ரோ திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்ததாக கூறி, தமிழக அரசு, மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், இந்த அனுமதி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
News November 26, 2025
MGR வாக்கு வங்கியை குறிவைக்கிறதா தவெக?

அதிமுகவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்த செங்கோட்டையன், சற்றுமுன் விஜய்யை சந்தித்து தவெகவில் இணைவதை உறுதி செய்துள்ளார். தன்னை MGR, ஜெயலலிதாவின் விசுவாசி என எப்போதும் கூறி வரும் செங்கோட்டையனை தவெகவில் இணைப்பதன் மூலம், MGR காலத்து அதிமுக வாக்குகளை பெறுவதோடு, தேர்தல் வியூகங்களை சிறப்பாக வகுக்க முடியும் என விஜய் தரப்பு நம்புவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News November 26, 2025
டெல்லி குண்டுவெடிப்பு: மேலும் ஒருவர் கைது

டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில், 7-வது நபராக ஃபரீதாபாத்தைச் சேர்ந்த சோயப் என்பவரை NIA கைது செய்துள்ளது. தற்கொலை படை தாக்குதல் நடத்திய டாக்டர் உமர் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்து, தாக்குதல் நடத்த பல்வேறு உதவிகள் செய்ததை, NIA கண்டுபிடித்துள்ளது. மேலும், அவர் அல் ஃபலாஹ் பல்கலைக்கழகத்தில் வார்டு பாயாக வேலை செய்ததும் தெரியவந்துள்ளது. அவரிடம் NIA அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


