News March 3, 2025

மார்டின் லூதர் கிங் பொன்மொழிகள்

image

*வெறுப்பை அன்பால் மட்டுமே விரட்ட முடியும். *கெட்டவர்களின் கொடுமைகளை விட நல்லவர்களின் அமைதி மிகவும் ஆபத்தானது. *சரியானதைச் செய்வதற்கு, எப்பொழுதுமே சரியான நேரமாகும். *சுதந்திரம் ஒருபோதும் ஒடுக்குவோரால் தானாக முன்வந்து கொடுக்கப்படுவதில்லை, அது ஒடுக்கப்பட்டவர்களால் கோரப்பட வேண்டும். *தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி. *ஒரு எதிரியை நண்பனாக மாற்றக்கூடிய ஒரே சக்தி அன்பு மட்டுமே.

Similar News

News April 2, 2026

‘நான் சாகப் போகிறேன்.. மன்னிச்சிருங்க’

image

குற்ற உணர்ச்சி ஒரு உயிரை குடித்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. பிரதீபா(29) மாடிக்குச் சென்ற நேரத்தில், வீட்டில் இருந்த அவரது 11 மாத குழந்தை வாளித் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது. தனது அலட்சியமே குழந்தையின் இறப்புக்கு காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் இருந்த பிரதீபா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவரிடம் மன்னிப்பு கேட்டு அவர் எழுதிய கடிதத்தை மீட்டு போலீஸ் விசாரித்து வருகிறது.

News April 2, 2026

இந்திய தேர்தல் வரலாற்றில் இடம் பெற்ற மொடக்குறிச்சி!

image

1996-ல் மொடக்குறிச்சி தொகுதியில் 1,033 வேட்பாளர்கள் போட்டியிட்டது இந்தியாவில் அபூர்வமான நிகழ்வாகும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாய சங்கங்கள் இதனை செய்தன. 65 பக்க வாக்குச்சீட்டு தேவைப்பட்டதால் இத்தொகுதியில் ஒரு மாதத்திற்கு வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகு, வேட்பாளர்களுக்கு வைப்புத்தொகையை உயர்த்த தேர்தல் ஆணையம் சீர்திருத்தம் செய்தது கவனிக்கத்தக்கது.

News April 2, 2026

அமைச்சரவைக்கு கவர்னர் கட்டுப்பட்டவர்: HC

image

அமைச்சரவையின் பரிந்துரைகளை தன்னிச்சையாக கவர்னர் நிராகரிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கும் அமைச்சரவை பரிந்துரையை கவர்னர் நிராகரித்ததை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் அமர்வு அமைச்சரவைக்கு கவர்னர் கட்டுப்பட்டவர் என திட்டவட்டமாக கூறியது.

error: Content is protected !!