News August 13, 2024

விஞ்ஞானிகளை மிரள வைத்த செவ்வாய் கிரகம்

image

செவ்வாய் கிரகத்தில் 2018 முதல் 2022 வரை ஆய்வு செய்த இன்சைட் லேண்டர் அனுப்பியுள்ள தகவல்கள் விஞ்ஞானிகளை அதிர வைத்துள்ளது. ஆம். செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளனர். செவ்வாயின் மேற்பரப்பிற்கு சில கி.மீ. அடியில் உள்ள பெரும் மலைகளில் தண்ணீர் இருப்பதாகவும், அந்த தண்ணீரானது ஒரு பெருங்கடல் அளவிற்கு இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Similar News

News March 11, 2026

PM மோடிக்கு CM ஸ்டாலின் அவசர கடிதம்

image

TN-ல் அனைத்து வகை சிலிண்டர்களும் தடையின்றி கிடைப்பதை PM மோடி உறுதிசெய்ய வேண்டும் என CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தனது கடிதத்தில் அவர், உணவகங்கள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், தொழில்மயமான TN பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் நாடு திரும்ப சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

News March 11, 2026

₹40,000+ சம்பளம்… 667 பணியிடங்கள்

image

மத்திய அரசின் கீழ் செயல்படும் மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் 667 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மைனிங், சர்வேயர் உள்ளிட்ட பணிகளுக்கு +2, டிப்ளமோ கல்வித்தகுதி போதுமானது. ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ₹40,000-க்கு மேல் சம்பளம் வழங்கப்படும். 18-30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த <>லிங்க்கில்<<>> ஏப்ரல் 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

News March 11, 2026

‘அம்மா.. நான் சாகப் போகிறேன்’

image

மும்பையில் காதலன் கொடுத்த மென்டல் டார்ச்சரால், 6 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்தேக புத்தி கொண்ட காதலன், மாணவி ஸ்துதி சோனாவானேவை(24) தொடர்ந்து மனதளவில் டார்ச்சர் செய்துள்ளதாக தெரிகிறது. இதனால், விரக்தி அடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை உணருங்கள் நண்பர்களே!

error: Content is protected !!