News August 8, 2024
காலையில் திருமணம்.. மாலையில் கத்திக்குத்து

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் நவீனுக்கும் (27), லித்திகாவுக்கும் (19) நேற்று காலை திருமணம் நடந்தது. மாலையில் நவீனின் மாமா வீட்டில் உள்ள அறையில் பேசிக் கொண்டிருந்த மணமக்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதில், கத்தியை எடுத்து சரமாரி குத்திக் கொண்டனர். இதில் லித்திகா உயிரிழந்தார். நவீன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 19, 2025
கண்மூடித்தனமாக AI-ஐ நம்பவேண்டாம்: சுந்தர் பிச்சை

AI-ல் தவறான தகவல்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூகுள் CEO சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். AI-ஐ கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என தெரிவித்த அவர், தகவலை வேறு தளத்தில் சரிபார்ப்பதே சிறந்தது எனவும் கூறியுள்ளார். அதேபோல் AI முதலீடு என்பது bubble வெடிப்பது போல பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால், நிறுவனங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பிபிசி பேட்டியில் கேட்டுக்கொண்டார்.
News November 19, 2025
டெல்லி குண்டுவெடிப்பு: மும்பையில் சிக்கிய மூவர்

டெல்லி குண்டுவெடிப்பில் தொடர்புள்ளதாக மும்பையை சேர்ந்த 3 பேரை பிடித்து NIA விசாரித்து வருகிறது. முதல்கட்ட விசாரணைக்கு பின் மூவரும் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பிரத்யேக தகவல் தொழில்நுட்ப செயலி மூலம் இவர்கள் தகவல்களை பரிமாறிக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் மும்பையை தொடர்ந்து மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களிலும் NIA தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது.
News November 19, 2025
நீலகிரி மாவட்டம்: தடை அறிவிப்பு

நீலகிரி மாவட்டம் சுற்றுலாவிற்கு பெயர் போன மாவட்டமாக விளங்குகிறது. இந்த மாவட்டத்தில் குன்னூர் பகுதியில் அதிகமான சுற்றுலா பயணிகள் டால்பின் ஹவுஸ் மற்றும் லாம்ஸ் ராக் போன்ற சுற்றுலா தலங்களில் விரும்பி ரசிக்கின்றனர். தற்போது சுற்றுலா தலங்களில் நடைபாதை மற்றும் சாலை பணிகள் போன்ற பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளது.


