News March 15, 2025
கனடா பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்காவுடன் வர்த்தகப் போர் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் பதவியேற்றுள்ளார். வரும் அக். மாதம் கனடா நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டின் PMஆக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், கூட்டணிக் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றது. நெருக்கடி ஏற்படவே, PM பதவியில் இருந்தும், கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் ட்ரூடோ விலகினார்.
Similar News
News March 15, 2025
வங்கிக் கணக்கில் வருகிறது பணம்

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 15ஆம் தேதி ₹1,000 மகளிர் உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அந்தவகையில், இந்த மாதத்திற்கான உதவித்தொகை இன்று காலை 9.30 மணிக்கு மேல் பயனாளிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இதனிடையே, நேற்றைய பட்ஜெட்டில் விடுபட்ட பயனாளிகள் புதிதாக விண்ணப்பிக்க, விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு நற்செய்தி கூறியுள்ளார்.
News March 15, 2025
வேலை கிடைக்கும் என்றால் ஹிந்தி படிப்பாங்க: திருமா

இருமொழிக் கொள்கை, இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், ஒற்றுமைக்கும் பொருத்தமானதாக இருக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ஹிந்தி படித்தால் வேலைவாய்ப்பு உறுதிப்படும் என்றால், அதனை படிப்பதை யாராலும் தடுக்க முடியாது. TNல் உள்ளவர்கள் கூட ஹிந்தி படிப்பர். ம.பி, உ.பி, ராஜஸ்தான் மாநிலங்களின் தாய்மொழியை கடுமையாக சிதைத்துவிட்டதாகவும், ஹிந்தி பேசும் மாநிலங்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் சாடினார்.
News March 15, 2025
தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்

TN அரசின் 2025-26 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் MRK பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார். இதில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய பட்ஜெட்டில் வேளாண் துணைக்கு ₹42,281 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம். தொடர்ந்து, மார்ச் 17 முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது.