News August 25, 2024
100 ஆண்டுகளுக்கு பிறகும் மாரி செல்வராஜ் படங்கள் பேசப்படும்

100 ஆண்டுகளுக்கு பிறகும் மாரி செல்வராஜின் படங்கள் பேசப்படும் என்று திரைப்பட இயக்குநர் மிஷ்கின் பாராட்டியுள்ளார். தனியார் டிவி சார்பில் 2024ம் ஆண்டுக்கான சிறந்த இயக்குநருக்கான மகுடம் விருது மாரி செல்வராஜூக்கு வழங்கப்பட்டது. அந்த விருதை விசிக தலைவர் திருமாவளவனுடன் சேர்ந்து மிஷ்கின் வழங்கினார். அப்போது பேசிய மிஷ்கின், அவரின் வாழ்வில் கண்ட வலிகளையே மாரி செல்வராஜ் படமாக்குவதாக புகழ்ந்தார்.
Similar News
News November 23, 2025
மணிரத்னத்திற்கே NO சொன்னாரா சாய் பல்லவி?

கமல், ரஜினி, ஷாருக்கான் என முன்னனி நடிகர்களே மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க முன்னுரிமை கொடுப்பார்கள். நிலைமை இப்படி இருக்க, புதிய படத்திற்கான கதை சொல்ல சாய் பல்லவியை மணிரத்னம் அலுவலகத்திற்கு அழைத்துள்ளாராம். ஆனால், சாய் பல்லவி செல்லவில்லையாம். வேறு ஒருவரை அனுப்பி கதை சொன்னாலும், கதை பிடிக்கவில்லை என கூறி நடிக்க மறுத்துவிட்டதாக ஒரு தகவல் கோலிவுட் வட்டாரத்தில் தீயாக பரவி வருகிறது.
News November 23, 2025
BREAKING: விஜய் திமுகவுக்கு ஓட்டு போட்டார்

இன்றைய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், கடந்த தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்ததாக சூசகமாக குறிப்பிட்டிருக்கிறார். உங்களையும் என்னையும்(விஜய்) ஓட்டு போட வைத்து ஏமாற்றினார்களே, அவர்களை எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 2021-ம் ஆண்டு தேர்தலில் கருப்பு, சிவப்பு நிற சைக்கிளில் சென்று திமுகவுக்கு விஜய் ஆதரவளித்ததாக அண்மையில் ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார்.
News November 23, 2025
பாண்டியாவுடன் நிச்சயதார்த்தம் முடிந்ததா?

ஹர்திக் பாண்ட்யா வீட்டில் சமீபத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதில், அவருடன் கிசுகிசுக்கப்படும் நடிகை மஹிகா சர்மா பங்கேற்றார். அப்போது வைர மோதிரம் அணிந்திருந்ததால், இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததாக செய்திகள் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மஹிகா, ஒரு அழகான மோதிரத்தை அணிந்ததற்கா இந்த அக்கப்போர், அடுத்ததாக, கர்ப்பமாக இருப்பதாக கூட செய்தி பரப்புவார்களோ என்றும் கேலி செய்துள்ளார்.


