News March 3, 2025

மார்ச் 3: வரலாற்றில் இன்று

image

* 1707 – முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் உயிரிழந்த நாள். *1833 – அகிலத்திரட்டு அம்மானையின்படி, நாராயணனின் அவதாரமாக அய்யா வைகுண்டர் திருச்செந்தூரில் பிறந்தார். *1839- டாடா குழும நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடா பிறந்தநாள். *1938 – சவூதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. *1939 – மும்பையில மகாத்மா காந்தி ஆங்கிலேயருக்கு எதிராக உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். *உலக காட்டுயிர் நாள்

Similar News

News March 16, 2026

5 ஆண்டுகளில் 6,00,00,00,00,000 திமுக ஊழல்: அன்புமணி

image

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு ஆட்சியாளர்களுக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோலாக சென்று கொண்டிருப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். அனைத்துத் துறைகளிலும் ஊழல்கள் தான் தழைத்தோங்கியுள்ளது. குற்றம்சாட்டிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் 6 லட்சம் கோடிக்கு திமுக ஊழல் செய்து சாதனை படைத்திருப்பதாகவும் சாடியுள்ளார். திமுக ஆட்சியை அகற்றுவதன் மூலமே TN-க்கு உண்மையான முன்னேற்றத்தை தர முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

News March 16, 2026

கோடையில் வீட்டை குளிர்ச்சியாக்க இது போதும்!

image

கோடை வந்தால் சில்லுனு இருக்க ஏசி வாங்கணும்னு அவசியம் இல்லை. இந்த டிப்ஸ் பாலோ பண்ண போதும் மக்களே. ▶ஜன்னலில் மூங்கில் (அ) தடிமனான கார்டன் ஸ்க்ரீனை பயன்படுத்தலாம் ▶வீட்டில் எதிரெதிர் இருக்கும் ஜன்னலை திறந்து வைக்க வேண்டும். இது சூடான காற்றை வெளியேற்றவும் புதிய காற்றை உள்ளே வரவும் உதவும் ▶இன்டோர் செடிகள், வீட்டை குளிர்ச்சியாக்கும் ▶வெப்பம் உண்டாக்கும் மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டாம்

News March 16, 2026

அஜித்தின் அடுத்த படம் இப்போதைக்கு இல்லை!

image

அஜித் – ஆதிக் படத்தின் அறிவிப்பு எப்போது என காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அவரது கார் ரேஸிங் அணி வெளியிட்டுள்ள அட்டவணையின்படி அடுத்த ஆண்டு ஜனவரி வரை அஜித்துக்கு ரேஸ் இருக்கிறது. இதனால் இப்போதைக்கு அவர் படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என தெரிகிறது. 2028-ல் ஆவது அவரது படம் வருமா என ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.

error: Content is protected !!