News March 29, 2025

மார்ச் 29: வரலாற்றில் இன்று

image

*1849 – பஞ்சாபை பிரித்தானியா கைப்பற்றியது. *1857 – கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள ராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் மங்கள் பாண்டே, பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார். *1999 – உத்தரப் பிரதேசம், சமோலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 103 பேர் உயிரிழந்தனர். *2007 – கணிதத்தின் நோபல் பரிசு எனப்படும் நார்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.

Similar News

News March 31, 2025

அமமுகவினர் கூண்டோடு அதிமுகவில் ஐக்கியம்

image

தஞ்சாவூர் மாவட்ட அமமுக நிர்வாகிகள் பலர் மொத்தமாக ராஜினாமா செய்துவிட்டு, அதிமுகவில் இணைந்துள்ளனர். அமமுக மாவட்ட அளவிலான நிர்வாகிகள், காங்கிரஸ், மதிமுக, பாஜக நிர்வாகிகள் பலர், ஓபிஎஸ் அணி நிர்வாகி என பலர் இன்று EPSஐ சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சியினை பலப்படுத்தும் பணிகளில் தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

News March 31, 2025

தொழில்நுட்பத்தால் உயிர் பிழைக்கும் பேருயிர்கள்

image

கோவை – பாலக்காடு ரயில் வழித்தடத்தில் கடந்த 27 மாதங்களாக யானைகள் ஏதும் உயிரிழக்கவில்லை என்று ரயில்வே நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அடர்ந்த காடுகளைக் கொண்ட இந்த வழித்தடத்தில் அவ்வப்போது யானைகள் ரயிலில் அடிபடுவதுண்டு. அதனை தடுக்கும் வகையில், அதிநவீன கேமரா கோபுரங்கள் உள்ளிட்டவற்றுடன் எடுக்கப்பட்ட தொழில்நுட்ப நடவடிக்கைகள் பலனளித்துள்ளதாக ரயில்வே கூறியுள்ளது.

News March 31, 2025

உலகிலேயே சக்திவாய்ந்த ஏவுகணை எது தெரியுமா?

image

உலகிலேயே மிகவும் அதிக தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை, ரஷ்யாவிடமே உள்ளது. R-36M என்று அழைக்கப்படும் அந்த ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது. அதிகபட்சமாக 16,000 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து இலக்கை தாக்கும் திறனுடையது. இதற்கடுத்து அதிக தொலைவு செல்லும் ஏவுகணை சீனாவிடமுள்ள Dongfeng-41 ஏவுகணையாகும். அது 15,000 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது.

error: Content is protected !!