News March 27, 2025
மார்ச் 27: வரலாற்றில் இன்றைய தினம்

1955 – ஈழத்துக் கவிஞர் முல்லையூரான் பிறந்த தினம்.
1969 – நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது.
1977 – அமெரிக்காவில் விமான விபத்தில் 583 பேர் உயிரிழந்தனர்.
2009 – இந்தோனேசியாவில் அணை உடைந்ததில் 99 பேர் பலியானார்கள்.
Similar News
News November 27, 2025
இன்று இரவு காவல் பணி அதிகாரிகள் விவரம்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (நவ.26) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர், விவரம், காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News November 26, 2025
EV விற்பனையில் மிரட்டும் மஹிந்திரா..!

கடந்த 7 மாதங்களில் மட்டும் 30,000 EV கார்களை விற்பனை செய்துள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு கார் விற்கப்பட்டுள்ளதாகவும், தங்களது 65% வாகனங்கள் இந்திய சாலைகளில் ஒவ்வொரு நாளும் பயணிப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும், வரும் 2027-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 250 சார்ஜிங் மையங்களை நிறுவ முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
News November 26, 2025
சினிமாவில் இருந்து விலகுகிறேன்… அறிவித்தார்!

‘சென்னை 28’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், இயக்குநர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி. பின்னர் ரஜினிகாந்துடன் அவர் நடித்த அனிமேஷன் படம் பாதியில் கைவிடப்பட்டது. தொடர்ந்து அஞ்சாதே, வெண்ணிலா வீடு என பல படங்களில் நடித்த அவர், கடைசியாக ’மிடில் கிளாஸ்’ என்ற படத்தில் நடித்து கவனம் பெற்றார். இந்நிலையில் தனிப்பட்ட வாழ்க்கைச் சூழலுக்காக சினிமாவிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.


