News March 22, 2025
மார்ச் 22: வரலாற்றில் இன்று!

*1945 – அரபு நாடுகள் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.
*1965 – இலங்கையில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்தது.
*1982 – நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது.
*1997 – ஹேல்-பொப் வால்வெள்ளி பூமிக்கு மிக அருகில் வந்தது.
சிறப்பு நாள்:
*உலக தண்ணீர் தினம்
Similar News
News March 22, 2025
டி.கே. சிவகுமாருக்கு எதிராக தமிழிசை ஆர்ப்பாட்டம்!

சென்னையில் தனது வீட்டின் முன்பு கருப்புக் கொடி ஏந்தி தமிழிசை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மேகதாதுவில் அணை கட்டுவதில் உறுதியாக உள்ள கர்நாடகா DY CM டி.கே. சிவகுமார், தமிழகம் வந்திருப்பதை கண்டித்து அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக CM ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில், டி.கே. சிவகுமார் கலந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
News March 22, 2025
ஐபிஎல்: சென்னை ரசிகர்களுக்கு நாளை டபுள் விருந்து!

IPL திருவிழா இம்முறை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தொடக்கப் போட்டி நடக்கும் ஒவ்வொரு மைதானத்திலும் கண்கவர் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அந்த வகையில், நாளை CSK – MI மோதும் EL CLASSICO போட்டியை காண வரும் ரசிகர்களுக்காக சேப்பாக்கத்தில் அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தல ஹெலிகாப்டர் ஷாட்டையும் காண வாய்ப்பு கிடைக்கலாம் என்பதால், ரசிகர்களுக்கு டபுள் விருந்துதான்!
News March 22, 2025
2ஆவது நாளாக தங்கம் விலை சரிவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2ஆவது நாளாக சவரனுக்கு ₹320 குறைந்துள்ளது. இன்று (மார்ச் 22) காலை நேர வர்த்தகப்படி 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹40 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ₹8,230க்கும், சவரன் ₹65,840க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ₹2 குறைந்து ஒரு கிராம் ₹110க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,10,000க்கும் விற்பனையாகிறது.