News March 18, 2025

மார்ச் 18: வரலாற்றில் இன்று!

image

*1922 – ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி, 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். 2 ஆண்டுகளில் விடுதலையானார்.
*1858 – டீசல் எஞ்ஜினை கண்டுபிடித்த ருடால்ஃப் டீசல் பிறந்த தினம்.
*இந்திய ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை தினம்.
*உலக மறுசுழற்சி தினம்.
*ஆசிரியர் நாள் (சிரியா)
*ஆண்கள் மற்றும் போர் வீரர்கள் நாள் (மங்கோலியா)

Similar News

News March 18, 2025

உலகை உலுக்கும் புகைப்படங்கள்.. கண்ணீர்

image

காசாவில் இஸ்ரேல் நடத்திய கோரத் தாக்குதலில் இதுவரை 300 பேர் இறந்துள்ளனர். எந்த பக்கம் திரும்பினாலும் சிறுவர்கள், பெண்கள் என அப்பாவி மக்களின் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறும் சத்தம் நெஞ்சை ரணமாக்குகிறது. இதுதொடர்பான <>Video <<>>& Photo-களை வெளியிடும் நெட்டிசன்கள், ‘எந்த நாட்டு மக்களுக்கும் இதுபோன்ற மோசமான நிலை வந்துவிடக்கூடாது’ என கண்ணீருடன் பதிவிடுகின்றனர்.

News March 18, 2025

செயற்கை இதயத்துடன் உயிர் வாழும் மனிதர்!

image

ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக செயற்கை இதயத்துடன் 100 நாள் வாழ்ந்து ஒருவர் சாதனை படைத்துள்ளார். நியூ சவூத்வேல்ஸை சேர்ந்த அந்த நபருக்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட, சிட்னியில் உள்ள ஹாஸ்பிடலில் டைட்டானியத்தில் உருவாக்கப்பட்ட BiVACOR என்ற செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. அதனுடன் 100 நாள் வரை அவர் கடந்திருக்கிறார். உலகிலேயே 6 பேருக்கு மட்டுமே இதுவரை செயற்கை இதயம் பொருத்தப்பட்டிருக்கிறது.

News March 18, 2025

டிரம்பின் சோஷியல் மீடியாவில் இணைந்த மோடி!

image

அமெரிக்க அதிபர் டிரம்பின் மீடியா மற்றும் டெக்னாலஜி குழுமத்துக்கு சொந்தமான ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளத்தில் பிரதமர் மோடி இணைந்துள்ளார். இதில் கடந்த 16 ஆம் தேதி அமெரிக்க தொகுப்பாளர் லெக்ஸ் பிரிட்மேனுடன் பிரதமர் மோடி கலந்துரையாடிய வீடியோவை டிரம்ப் பகிர்ந்துள்ளார். இந்த சமூக ஊடக தளத்தில் இணைந்துள்ள பிரதமர் மோடி, தனது கலந்துரையாடல் வீடியோவை பகிர்ந்த டிரம்புக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

error: Content is protected !!