News March 18, 2024
மரக்காணம்: தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு!

மரக்காணம் நடுகுப்பத்தில் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற திருவிழாவின்போது பிரச்னை ஏற்பட்டதால் திருவிழா நடத்த காவல்துறை தடை விதித்தது. இந்நிலையில் நேற்று(மார்ச் 17) ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி காவல்துறை மீண்டும் திருவிழா நடத்த அனுமதிக்கவில்லை என்றால், தேர்தலை புறக்கணித்து ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாக முடிவு செய்தனர்.
Similar News
News November 26, 2025
விழுப்புரத்தில் கோயில் பூட்டை உடைத்து திருட்டு!

விழுப்புரம் கே கே சாலை மருதமலை முருகன் நகர் பகுதியில் ராஜகணபதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் பூசாரியாக சுரேஷ் உள்ளார். அவர் நேற்று (நவ.26) பூஜை முடித்து சென்று விட்டார். காலையில் வந்து பார்க்கும்போது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அங்கு வைத்திருந்த உண்டியலும் உடைக்கப்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தற்போது போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 26, 2025
போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்த ஐந்து பேர் கைது

கொடுக்கன்குப்பத்தில் மேல்மலையனூர் எஸ்.ஐ வினதா தலைமையிலான போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு ஆலமரத்தடியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த பாரதியார்,ஸ்ரீதர்,சுரேஷ் பார்த்திபன்,லோகநாதன் ஆகியோர் கஞ்சா,போதை மாத்திரைகள் விற்பவர்கள் என தெரியவந்த நிலையில் 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 15 கிராம்,கஞ்சா 7 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
News November 26, 2025
விழுப்புரம்: பெண் மர்ம சாவு – திடீர் திருப்பம்!

விழுப்புரம்: அம்மாகுளத்தைச் சேர்ந்த பார்வதி (27) தனது கணவரின், தந்தையின் துக்க நிகழ்வுக்கு சென்ற நிலையில், நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் பலத்த காயங்களுடன் பார்வதி இறந்து கிடந்தார். இந்நிலையில், அவருக்கும், கணவர் மதியழகனுக்கும் ஏற்பட்ட தகராறில், மதியழகன் பார்வதியை சுவற்றில் முட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனடிப்படையில், போலீசார் மதியழகனை கைது செய்தனர்.


