News March 12, 2025
மரடோனா மரண வழக்கு: விசாரணை தொடங்கியது

கால்பந்து விளையாட்டு ஜாம்பவனான அர்ஜென்டினாவின் மரடோனா (60) 2020இல் மாரடைப்பால் காலமானார். அதற்கு முன்பு ரத்த உறைதல் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீட்டுக்கு திரும்பியிருந்தார். இதனால் மருத்துவ குழுவின் கவனக்குறைவே மரணத்திற்கு காரணமென குற்றஞ்சாட்டி 8 பேர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. 8 பேர் மீதான குற்றச்சாட்டு உறுதியானால் 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படக்கூடும்.
Similar News
News March 13, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News March 13, 2025
தத்தெடுத்த குழந்தைக்கு இப்படி ஒரு கதியா?

சிறு தவறு செய்ததற்காக அமெரிக்காவை சேர்ந்த டேனியல் (47) என்பவன், தனது 8 வயது வளர்ப்பு மகளான ஜெய்லினை, ‘ட்ராம்ப்போலைன்’ எனும் குதித்து விளையாடும் இடத்துக்கு அழைத்து சென்றிருக்கிறான். அங்கு 110 டிகிரி வெயிலில், ஜெய்லினை குதிக்க சொல்லி இருக்கிறான். தண்ணீர் கூட கொடுக்காமல் குதிக்கச் செய்ததால், ஜெய்லின் சுருண்டு விழுந்து இறந்திருக்கிறாள். இந்தக் கொடூரனுக்கு 18 ஆண்டு சிறைத்தண்டனை கிடைத்துள்ளது.
News March 13, 2025
மம்மியை அரெஸ்ட் பண்ணுங்க ஆபிஸர்..!

தனது ஐஸ்க்ரீமை சாப்பிட்ட தாய்க்கு எதிராக, 4 வயது சிறுவன் போலீசுக்கு போன் செய்த சுவாரஸ்ய சம்பவம் USAவில் நடந்துள்ளது. எனது மம்மி ரொம்ப மோசம், அவரை அரெஸ்ட் செய்ய வேண்டும் என அந்த சிறுவன் புகாரளித்துள்ளான். வீட்டிற்கு வந்து விசாரித்த போலீசார், உண்மை தெரிந்ததும், வேறு ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்து சிறுவனை சமாதானம் செய்துள்ளனர். மேலும், உதவிக்கு போலீஸை அழைக்க தெரிந்ததற்காக சிறுவனை பாராட்டினர்.