News February 24, 2025
3 மாநிலங்களில் மாவோயிஸ்ட் வேட்டை: என்ஐஏ அதிரடி

கேரளாவின் எடக்கரை வனப்பகுதியில் கடந்த 2017ல் ஆயுதப் பயிற்சி பெற்ற மாவோயிஸ்ட்களில், 3 பேரை என்ஐஏ அடுத்தடுத்து கைது செய்தது. அவர்களில் மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர் ராகவேந்திராவிடம் விசாரணை நடத்தியதில் தமிழகம், கேரளா, கர்நாடகாவில் மேலும் சிலர் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. எனவே 3 மாநிலங்களிலும் போலீசாருடன் இணைந்து என்ஐஏ தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
Similar News
News February 24, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹80 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.24) சவரனுக்கு ₹80 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் கிராம் ₹8,055க்கும், சவரன் ₹64,440க்கும் விற்பனையாகிறது. அதேநேரத்தில் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி கிராம் ₹108க்கும், கிலோ வெள்ளி கிலோ ₹1,08,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்தில் சற்று இறங்கு முகத்தை சந்தித்த தங்கம், தற்போது மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது கவனிக்கத்தக்கது.
News February 24, 2025
திருப்பதி ஏழுமலையான் பக்தர்களின் கவனத்திற்கு..

கோடை விடுமுறையில் திருப்பதியில் கூட்டம் அலைமோதும். இதனை முன்னிட்டு, திருப்பதி கோயிலில் மே மாதத்திற்கான தரிசன டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. அதன்படி 300 ரூபாய்க்கான முன்பதிவு, இன்று காலை 10 மணிக்கு தொடங்கி இருக்கிறது. அதே நேரத்தில், மதியம் 3 மணிக்கு திருமலையில் தங்கும் அறைகளுக்கான முன்பதிவும் தொடங்க இருக்கிறது. டிக்கெட் பெற <
News February 24, 2025
கனவில் கூட நினைச்சு பாக்கல: பிரதீப் நெகிழ்ச்சி

‘டிராகன்’ படத்தை இயக்குநர் ஷங்கர் வாழ்த்தியது, கனவிலும் தான் நினைக்காதது என பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சிறு வயதில் இருந்தே ஷங்கரின் படங்களை பிரமிப்புடன் பார்த்து வளர்ந்தவன் என்றும், அவரை போற்றும் ரசிகனாக இருந்ததையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், தனது உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்துவது கடினம் என கூறி நன்றி தெரிவித்துள்ளார்.