News August 3, 2024
ஒலிம்பிக்ஸில் மனு பார்க்கர் அதிர்ச்சித்தோல்வி

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 25 மீட்டர் பிஸ்டல் சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பார்க்கர் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இந்தப் போட்டியில் அவர் இன்று பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதிமூச்சு வரை போராடிய மனு பார்க்கரால், 4ஆவது இடமே வர முடிந்தது. இதனால் மனு பார்க்கர் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
Similar News
News August 19, 2025
பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து

பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. டிரம்ப் 50% வரி விதித்ததால், தமிழக உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட, பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என பிரதமருக்கு CM ஸ்டாலின் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், ஆக.19 முதல் செப்.30 வரை பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு விலக்கு அளித்து, மத்திய அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
News August 19, 2025
NDA கூட்டணி கட்சிகள் ஆலோசனை

டெல்லியில் NDA கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. துணை ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அதேபோல், INDIA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்று பிற்பகல் 12:30 மணிக்கு கூட்டணி கட்சிகள் ஆலோசிக்க உள்ளன.
News August 19, 2025
கவர்னர், ஜனாதிபதிக்கு காலக்கெடு.. இன்று விசாரணை

மசோதாக்கள் மீது முடிவெடுக்க கவர்னர், ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. சட்டப்பேரவை இயற்றிய மசோதாக்களை கிடப்பில் போடுவதாக தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. அதில், மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் கவர்னரும், ஜனாதிபதியும் முடிவெடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதை எதிர்த்து ஜனாதிபதி 14 கேள்விகளை எழுப்பியிருந்தார்.