News July 27, 2024
ரோகிணியில் பிறந்தவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

“ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய” ஆதிசங்கரர் அருளிய இந்த சிவ பஞ்சாட்சர ரோகிணி நட்சத்திர ஸ்லோகத்தை திருநாள், சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட நாள்களில் , உடல் & மன சுத்தியுடன் 4 முறை பாடி, வில்வம் சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட கஷ்டங்கள் விலகும்; எண்ணியது ஈடேறும் என்பது ஐதீகம்.
Similar News
News March 7, 2026
என் கணவருக்கு நன்றி.. லதா ரஜினிகாந்த்!

மனைவிக்கு கணவரின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பது குறித்து லதா ரஜினிகாந்த் பேசியுள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஒரு வீட்டில் கணவர் துணை இல்லாமல் ஒரு பெண்ணால் எதையும் சாதிக்க முடியாது. எனது கணவருக்கு தலைவணங்கி நன்றி கூறிக்கொள்கிறேன் என தெரிவித்தார். எனது முயற்சிகள் அனைத்தையும் என்னுடைய கணவருக்கே அர்ப்பணிக்கிறேன் என்று கூறினார்.
News March 7, 2026
அதிமுகவுடன் கூட்டணி.. கடைசி நேரத்தில் அறிவித்தார்

தேர்தலையொட்டி சிறிய கட்சிகள், அமைப்புகள் தங்களது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன. தேர்தல் தேதியை அறிவிக்க சில நாள்களே உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் மக்கள் ராஜ்ஜியம் கட்சி இணைந்துள்ளது. அக்கட்சியின் நிறுவனத் தலைவர் PR சிவசாமி தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்று EPS-ஐ இன்று சந்தித்தார். தொடர்ந்து, வரும் தேர்தலில் அதிமுகவிற்கு முழு ஆதரவை தெரிவிப்பதாக சிவசாமி அறிவித்தார்.
News March 7, 2026
ஈரான் போர் நீடித்தால் இந்தியாவுக்கு பாதிப்பு: SBI

ஈரான் உள்ளிட்ட மேற்காசிய பகுதியில் மோதல் நீண்ட காலம் நீடித்தால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் என்று SBI-ன் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. எண்ணெய் விலை $130/பேரல் வரை உயர்ந்தால் FY27-ல் (2026-27) GDP வளர்ச்சி 7% லிருந்து 6% ஆக குறையும் என்று எச்சரிக்கிறது. வளைகுடா நாடுகளிலிருந்து வெளிநாட்டு இந்தியர்கள் அனுப்பும் பணம் மற்றும் வர்த்தகம் தடைப்படுவது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும்.


