News December 4, 2024
மன்சூர் அலிகான் மகன் கைது

நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்-ஐ போலீசார் பல மணி நேர விசாரணைக்குப் பின் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் கஞ்சா மற்றும் மெத் விற்பனை செய்ததாக சென்னையில் 10 பேர் கைதானார்கள். அவர்களுடன் அலிகான் துக்ளக்கிற்கு தொடர்பு இருப்பதாக கூறி விசாரணை நடத்திவந்த போலீசார், இன்று காலை அவரை கைது செய்தனர். அவரது கூட்டாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News August 23, 2025
முதுகுவலியால் கஷ்டமா.. உதவும் சுப்த வஜ்ராசனம்!

✦முதுகெலும்பு நரம்புகள், தோள்கள் & முதுகை வலுப்படுத்த உதவும்.
✦தோள்பட்டை வலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த யோகா உதவும்,
➥படத்தில் உள்ளது போல, காலை முட்டி போட்டு, முதுகை நேராக வைத்து படி உட்காரவும்.
➥மெதுவாக மெல்ல பின்னோக்கி சாய்ந்து, தலை- கழுத்து- முதுகு தரையில் படும்படி(படத்தில் உள்ளபடி) படுக்கவும்.
➥இந்த நிலையில் 15- 20 வினாடிகள் வரை இருந்துவிட்டு, பிறகு பழைய நிலைக்கு திரும்பவும்.
News August 23, 2025
TN அரசியல் தெரிந்தபின் விஜய் அரசியலுக்கு வரட்டும்: எச்.ராஜா

தமிழ்நாட்டில் உள்ள தனது ரசிகர்களை பிழிந்து பணம் சம்பாதித்ததை தவிர விஜய் மக்களுக்கு என்ன செய்துள்ளார் என எச்.ராஜா கேள்வி எழுப்பினார். பாஜக கொள்கை ரீதியான எதிரி என்றால், உங்களுக்கு என்ன கொள்கை இருக்கிறது? என கேட்டார். பாஜகவை பற்றி தவறாக விமர்சனம் செய்ய வேண்டாம் என அவரை எச்சரிக்கிறேன் என்றார். மேலும், வாக்கு வேண்டுமென்றால் தமிழ்நாட்டின் அரசியல் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்றும் சாடினார்.
News August 23, 2025
காசாவில் கடும் உணவு பஞ்சம்: ஐ.நா அறிவிப்பு

காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது. சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாகவும், இஸ்ரேலின் தடை உத்தரவு காரணமாக காசாவுக்குள் உணவைக் கொண்டு செல்ல முடியாத சூழல் நிலவுவதாகவும், ஐ.நா நிவாரண உதவி பிரிவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மறுத்த இஸ்ரேல் அரசு, உணவு பஞ்சம் என்பது ஹமாஸ் அமைப்பால் பரப்பப்பட்ட பொய் என பதிலடி கொடுத்துள்ளது.