News August 3, 2024

ஆணவக்கொலை: திருமா காட்டம்

image

தருமபுரி அருகே முகமது ஆசிக் கொலை செய்யப்பட்ட காட்டுமிராண்டித் தனத்தை மிக வன்மையாக கண்டிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆதிக்க சாதியவாதக் கும்பலின் இந்த ‘பித்துநிலை உளவியல்’ தற்போது தலித்துகளிடையேயும் பரவுவதாகவும், மத்திய, மாநில அரசுகள் ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் இயற்றவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ₹25 லட்சம் இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News November 28, 2025

கேட்ட வரத்தை தரும் நட்சத்திர தீப வழிபாடு!

image

திருவோண நட்சத்திரத்திற்கு முன் 24 நிமிடங்கள் மட்டுமே வரும் அபிஜித் நட்சத்திரத்திடம் முழு மனதோடு வேண்டினால், கேட்ட வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். அகல் விளக்கில் 1 ஸ்பூன் பச்சை பயிரை சேர்த்து, நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். கிருஷ்ணரின் படத்திற்கு முன் இந்த தீபத்தை ஏற்றி வைத்து, முழு மனதோடு ஏதாவது ஒரு காரியத்தை முன்வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இப்பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News November 28, 2025

விஜய் அப்போ பிறக்கவே இல்லை.. படிச்சி பாருங்க பாஸ்

image

1972-ல் செங்கோட்டையன் அதிமுகவில் இணைந்தபோது, விஜய் பிறக்கவேயில்லை. ஆம், விஜய் பிறந்தது 1974-ல் தான். 1977-ல் முதல்முறையாக KAS, MLA ஆன போது, விஜய்க்கு வயது 3. 1989-ல் ஜெ., ஜானகி அணிகள் என அதிமுக பிரிந்தபோது, விஜய் குழந்தை நட்சத்திரமாக இருந்தார். 1991 – 1996 காலகட்டத்தில் KAS முதல்முறையாக அமைச்சரான போதுதான், விஜய் ஹீரோவாக (நாளைய தீர்ப்பு – 1992) எண்ட்ரி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 28, 2025

இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவித்தார்

image

கனமழை எச்சரிக்கையை அடுத்து, ராமேஸ்வரம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.28) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். ‘டிட்வா’ புயல் காரணமாக, கடலோர பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பாம்பன் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும், இன்று சில மாவட்டங்களுக்கு <<18406009>>ரெட் அலர்ட் எச்சரிக்கை<<>> விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கவனமாக இருங்கள்.

error: Content is protected !!