News June 27, 2024
ஆணவக்கொலைக்கு தனி சிறப்பு சட்டம் தேவை: பா.ரஞ்சித்

விருதுநகரில் பட்டியலின இளைஞர் அழகேந்திரனின் தலையை துண்டித்து ஆணவப்படுகொலை செய்யப்பட்டதற்கு இயக்குநர் பா. ரஞ்சித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அழகேந்திரனை ஆணவப்படுகொலை செய்த குற்றவாளிகள் யாராக இருந்தாலும் காவல்துறை கைது செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற கொடூரமான கொலையை தடுக்க, தனிச்சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News March 3, 2026
தவெகவுடன் காங்கிரஸா? செல்வப்பெருந்தகை

தவெகவுடன் காங்., கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக வெளியாகும் தகவலுக்கு செல்வப்பெருந்தகை மறுப்பு தெரிவித்துள்ளார். தவெகவுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ பேச கட்சித் தலைமை, மாநிலத் தலைவரான தன்னிடம் இதுவரை எந்த அறிவுறுத்தலையும் வழங்கவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், பின்வாசல் அரசியல் செய்ய வேண்டிய அவசியமும் தங்களுக்கு இல்லை என்ற அவர், திமுகவுடனே கூட்டணி என்பதில் தெளிவாக உள்ளோம் என்றார்.
News March 3, 2026
மாரடைப்பு வருவதை முன்பே கண்டறிய..

மாரடைப்புகள் தற்போது அதிகளவில் ஏற்பட தொடங்கி விட்டன. சில சோதனைகள் மூலம் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை ஆரம்பத்திலேயே தெரிந்துக் கொள்ளலாம் என டாக்டர்கள் கூறுகிறார்கள். இந்த டெஸ்ட்டுகளை எடுத்துப்பாருங்கள்: Waist circumference, HbA1C, CT கரோனரி ஆஞ்சியோகிராம், எக்கோ கார்டியோகிராம், ECG. மாரடைப்பிற்கு சிகரெட், தூக்கமின்மை, மன அழுத்தம், தவறான உணவு பழக்கம் போன்றவை முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது.
News March 3, 2026
அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்யாது ஏன்?

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் ₹1,020 கோடி ஊழல் நடந்தது என்ற புகாரின் அடிப்படையில் அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிய ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை. இதை எதிர்த்து, அதிமுகவின் இன்பதுரை தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இன்றைய விசாரணைக்கு பின் வழக்குப்பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


