News December 14, 2024

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை இணைப்பு கல்லூரிகளில் இன்று நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பாதுகாப்பு கருதி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை இணைப்பு கல்லூரிகளில் இன்று நடத்தப்பட பருவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பிறகு மறுதேதி வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Similar News

News March 5, 2026

சற்றுமுன்: விலை கணிசமாக குறைந்தது

image

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. ₹100-க்கு 5 கிலோ வரை வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளிக்கும் இதே நிலைமைதான். மேலும், பீட்ரூட்(கிலோ ₹30), உருளைக் கிழங்கு (கிலோ ₹15), சுரைக்காய் (கிலோ ₹35) உள்ளிட்டவையும் விலை குறைந்துள்ளது. இதேபோல், திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களிலும் காய்கறி விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உங்க ஏரியாவில் விலை எப்படி இருக்கிறது?

News March 5, 2026

பட்டா, சிட்டா ஆவணம்.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

image

பட்டா, சிட்டா, FMB ஆகியவற்றை ஒன்றாக பெறும் வகையில், ஒருங்கிணைந்த நில ஆவணம் வழங்கும் சேவையை TN அரசு தொடங்கியுள்ளது. eservices.tn.gov.in இணையதளத்தில் நிலம் சார்ந்த மாவட்டம், வட்டம், கிராமம் உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து ஒருங்கிணைந்த ஆவணத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம். மேலும், நிலத்தின் உரிமை மாற்ற வரலாற்றை தெரிந்துகொள்ள உதவும் பட்டா மாறுதல் அறிக்கை சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. SHARE IT

News March 5, 2026

திமுக – காங்கிரஸில் இன்னும் இந்த சிக்கல் இருக்குதா?

image

திமுக-காங்., இடையே ஏற்பட்டிருக்கும் கூட்டணி உடன்பாடு வெறும் பேப்பரில் மட்டுமே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இவ்வளவு நாள் தவெகவுடன் காங்., திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தியதே அதற்கு காரணம் என்கின்றனர். இதனால், காங்கிரஸ் மீது திமுகவுக்கு நம்பிக்கை குறைந்திருக்கலாம் எனவும் இதனால் இந்த கூட்டணி அடுத்துவரும் தேர்தல்களில் கைகோர்க்குமா என்பது சந்தேகமே என கூறி வருகின்றனர்.

error: Content is protected !!