News March 26, 2025
கண்ணீர் மழையில் மனோஜ் உடல் தகனம்!

மாரடைப்பால் காலமான நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் (48) உடல், பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு தந்தை பாரதிராஜா, மகள்கள் ஆகியோர் கண்ணீருடன் இறுதிச்சடங்குகளை செய்தனர். பாக்யராஜ், சீமான், வைரமுத்து உள்ளிட்டோர் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டனர். பல கதாபாத்திரங்கள் மூலமாக நம் மனதில் இடம்பிடித்த மனோஜ், இறுதியாக காற்றோடு காற்றாக கலந்துவிட்டார். REST IN PEACE MANOJ.
Similar News
News December 1, 2025
நெல்லை: VOTER ID நம்பர் இல்லையா? – இதோ எளிய வழி!

நெல்லை மக்களே, உங்க VOTER ID எண் தெரியாதா? இதை யாருட்ட கேக்கன்னு தெரியலையா?? VOTER ID எண் இல்லாமல் கண்டுபிடிக்க வழி இருக்கு! இங்கு <
News December 1, 2025
ராஜ்யசபா புதிய உயரத்தை எட்டும்: தம்பிதுரை

ராஜ்யசபாவில் பேசிய அதிமுக MP தம்பிதுரை, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டார். மேலும், ‘உங்கள் தலைமைப்பண்பால் ராஜ்யசபா சிறந்த நாள்களை காணும் என நம்புகிறேன். அது, இந்தியாவை ஒரு புதிய உயரத்திற்கு அழைத்து செல்லும்’ என்று தெரிவித்தார். தொடர்ந்து, தமிழக பிரச்னைகளை பேச அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
News December 1, 2025
அண்ணாமலை கொடுக்கும் கல்யாண கிஃப்ட்டின் ரகசியம்?

அண்ணாமலை, தான் பங்கேற்கும் அனைத்து திருமணங்களிலும் ஒரே மாதிரியான கிஃப்ட்டை தான் கொடுக்கிறார். அது என்னவாக இருக்கும் என்றே பலரும் தேடி வருகின்றனர். திருமணம் மங்களகரமானது. இதனை வெளிப்படுத்தும் விதமாக, விவசாயிகளிடம் இருந்து மஞ்சளை நேரடியாக வாங்கி அதை பதப்படுத்தி, அரைத்து கண்ணாடி பாட்டிலில் அடைத்து பரிசளித்து வருகிறாராம். இந்த ஐடியாவும் நல்லா இருக்கே.. நாமளும் பாலோ பண்ணலாம்!


