News March 26, 2025

நடிகராக விரும்பாத மனோஜ்…!

image

தந்தை பாரதிராஜா இயக்கத்தில் முதன்முதலாக தாஜ்மஹால் படத்தில் நடித்தபோது நடந்த சம்பவத்தை பழைய பேட்டி ஒன்றில் <<15885902>>மனோஜ்<<>> நினைவுகூர்ந்தார். அப்போது, ‘அப்பாவுக்கு என்னை நடிகராக்கி பார்க்க ஆசை இருந்தது. ஆனால், நடிகராக வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை’ என அவர் கூறினார். கொஞ்சமும் இஷ்டம் இல்லாமல்தான் தாஜ்மஹால் படத்தில் நடித்ததாகவும் மனோஜ் தெரிவித்தார்.

Similar News

News November 6, 2025

சீனாவில் 10 நாள்களில் 2-வது நிலநடுக்கம்

image

சீனாவின் வடமேற்கில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 220 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ள நிலையில், உயிர்சேதம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த அக்.26-ல், 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இது 10 நாள்களில் உருவாகியுள்ள 2-வது நிலநடுக்கம்.

News November 6, 2025

விமானப்படையில் சாதனை பெண்கள் PHOTOS

image

தடைகள் ஆயிரம் இருந்தாலும், தைரியம் தான் பறக்க கற்றுத் தருகிறது. பெண்கள், இந்திய விமானப்படையில் சேர்ந்ததோடு, உயர பறக்கவும் செய்துள்ளனர். விமானியாக, அதிகாரியாக, விஞ்ஞானியாக அவர்கள் சாதித்தது, தங்களுக்காக மட்டுமல்ல, கனவுகளோடு காத்திருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்காகவும் தான். தைரியத்திற்கு பாலினம் கிடையாது என்பதை நிரூபித்த பெண்களின் போட்டோஸை ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.

News November 6, 2025

IND vs AUS: அரை சதத்தை தவறவிட்டார் கில்

image

ஆஸி.,க்கு எதிரான 4-வது டி20-ல், இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் அரை சதத்தை தவறவிட்டுள்ளார். 39 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து 46 ரன்கள் எடுத்த நிலையில், நேதன் எல்லிஸ் வீசிய ஸ்விங்கரில் போல்ட் ஆனார். 14.1 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 121 ரன்களை எடுத்துள்ளது. சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா களத்தில் உள்ளனர்.

error: Content is protected !!