News March 25, 2025
மனோஜ் பாரதிராஜா காலமானார்

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார். தாஜ் மகால், வருஷமெல்லாம் வசந்தம் ஆகிய படங்களில் நடித்திருக்கும் அவர், மார்கழி திங்கள் என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார்.
Similar News
News March 26, 2025
உங்கள் மனைவியிடம் இந்த 7 அறிகுறிகள் உள்ளதா?

உங்கள் மனைவி, உங்கள் மீது கோபத்தில் இருப்பதை பின்வரும் அறிகுறிகள் உணர்த்தும்: 1)வழக்கத்துக்கு மாறான அமைதி 2)அடிக்கடி உங்களை விமர்சிப்பது 3)அடிக்கடி எரிச்சல் / கோபம் 4)தலைவலி, தசைப்பிடிப்பு அறிகுறிகள் 5)வழக்கமாக செய்துகொண்டிருந்த விஷயங்களிலிருந்து விலகுவது 6)தாம்பத்ய உறவை தவிர்ப்பது 7)கடமைக்காக பேசுவது, இடித்துப் பேசுவது என பேச்சில் அதிருப்தி. உடனே காரணத்தை கண்டறிந்து சரிசெய்தால் மகிழ்ச்சி தானே!
News March 26, 2025
டெல்லி செல்லும் அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. நேற்று அதிமுக பொதுச்செயலாளர் EPS டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து திரும்பிய நிலையில், அண்ணாமலை டெல்லிக்கு பயணமாகிறார். கூட்டணி கணக்குகள், அண்ணாமலையின் தலைவர் பதவி, தமிழக அரசியல் களம் ஆகியவை குறித்து மூத்த தலைவர்களுடன் அண்ணாமலை ஆலோசிக்கலாம் என சொல்லப்படுகிறது.
News March 26, 2025
நெட்ஃபிளிக்ஸில் சாதனை படைத்த ‘Adolescence’

பிரிட்டிஷ் கிரைம் டிராமாவான ‘Adolescence’, இதுவரை எந்த ஒரு லிமிடெட் வெப்சீரிஸும் செய்யாத சாதனையை படைத்துள்ளது. நெட்ஃபிளிக்ஸில் வெளியான 11 நாள்களில், உலகளவில் 6.63 கோடி பார்வையாளர்களை அந்த வெப்சீரிஸ் பெற்றுள்ளது. வெறும் 4 எபிசோட்களே கொண்ட அந்த இணையத் தொடரானது, 13 வயது சிறுவன் செய்த கொலையை கதைக்களமாக கொண்டு சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் தேதி இத்தொடர் வெளியானது.