News August 9, 2025
மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் ₹34 கோடி வருவாய்

PM மோடியின் மன் கீ பாத் நிகழ்ச்சியின் மூலம் ₹34 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜ்யசபாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் இந்த விவரம் வெளியாகியுள்ளது. மேலும், கூடுதல் செலவுகள் இல்லாமல், தற்போதுள்ள வசதிகளை பயன்படுத்தி இந்நிகழ்ச்சி தயாரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 அக்.3-ம் தேதி முதல் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
Similar News
News August 9, 2025
விண்வெளி சாதனை நாயகன் காலமானார்!

விண்வெளி வீரர் ஜிம் லொவல்(97) காலமானார். நிலவுக்கு சென்ற அப்போலோ 13 விண்வெளி பயணத்தின் தளபதியாக பணியாற்றிய இவர், சுமார் 715 மணி நேரத்திற்கும் மேலாக விண்வெளியில் இருந்துள்ளார். 1962-ம் ஆண்டு NASA-வில் பணிக்கு சேர்ந்த ஜிம், ஜெமினி 7 & ஜெமினி 12 விண்வெளி பயணங்களிலும் பணிபுரிந்துள்ளார். ஒரு தலைமுறைக்கே முன்மாதிரியாக திகழ்ந்த ஜிம் லொவலின் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News August 9, 2025
விவாதமாக மாறிய திருமாவின் சர்ச்சை பேச்சு

MGR குறித்து திருமா விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. உண்மையில் MGR பார்ப்பனர்களுக்கு ஆதரவாக செயல்பட்டாரா அல்லது எம்ஜிஆரை முன்னிறுத்தி அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த திட்டமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். இத்தனை ஆண்டுகள் கழித்து MGR குறித்து திருமா விமர்சனம் செய்ய வேண்டியது ஏன்; திருமாவின் விமர்சனம் ஏற்புடையதா என சமூக வலைதளங்களில் விவாதம் நடந்து வருகிறது.
News August 9, 2025
எம்ஜிஆரை விமர்சித்த திருமாவளவன்

திராவிட இயக்கத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்தவர் MGR என்ற விமர்சனம் உண்டு என திருமா தெரிவித்துள்ளார். ஒரு பார்ப்பனிய பெண் (ஜெயலலிதா) திராவிட இயக்கத்தின் தலைவராக மாற பாதை வகுத்து தந்தவர் MGR என விமர்சித்த திருமா, கருணாநிதிக்கு பேனா சிலை வைத்தால் உடைப்பேன் என கூறுகிறார்கள், எம்ஜிஆர், ஜெ., குறித்து பேசுவது கிடையாது. தமிழக அரசியலின் மையமாக இருப்பது கருணாநிதி எதிர்ப்பு மட்டும்தான் என சாடினார்.