News December 27, 2024

மன்மோகன் சிங் இறுதிச்சடங்கு சர்ச்சை

image

மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடர்பாக காங்., – மத்திய அரசுக்கு இடையே மோதல் என தெரிகிறது. அவரது நினைவிடத்திற்கு டெல்லியில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற காங்., கோரிக்கைக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை. INC உடன் கலந்தாலோசிக்காமல் நிகம்போத் காட்டில் உடல் தகனம் செய்யப்படும் என உள்துறை அறிவித்துள்ளது. இதற்கிடையில், நினைவிடம் அமைப்பது, அவருக்கு அளிக்கும் அஞ்சலி என மோடிக்கு கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

Similar News

News September 12, 2025

பாஜக கொள்கையுடன் திமுக ஒத்துப்போகிறது: சீமான்

image

பாஜகவின் எல்லா கொள்கைகளோடும் திமுக ஆட்சி ஒத்துப்போவதாக சீமான் விமர்சித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்து முதலில் பேரணி நடத்தியவர் CM ஸ்டாலின் என்றும் அதை ஆதரித்து உலகநாடுகளில் பிரதிநிதியாக பேசியவர் கனிமொழி எனவும் அவர் கூறினார். மேலும், பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போது திமுக குஜராத் கலவரத்தை ஆதரித்து பேசியதாகவும். தற்போது கூட்டணியில் இல்லாததால் எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

News September 12, 2025

திமுக ஆட்சியில் போலீசுக்கே பாதுகாப்பில்லை: EPS

image

திமுக ஆட்சியில் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை என EPS தெரிவித்துள்ளார். கடந்த 6 மாதங்களில் 6 போலீசார் கொலை செய்யப்பட்டு இருப்பதாக அவர் கூறினார். போலீசை கண்டால் குற்றம் புரிந்தவர்கள் பயப்பட வேண்டும். ஆனால் திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயம் இல்லை என்றும் அதனால் தான் தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகளவில் நடப்பதாகவும் EPS சாடினார்.

News September 12, 2025

காந்த கண்ணழகி ஸ்ரீலீலா கிளிக்ஸ்

image

ஸ்ரீலீலா காந்த கண்ணழகியா? இடுப்பழகியா? என்ற விவாதம் அவர் இன்ஸ்டாலில் பதிவிட்ட படங்களால் கிளம்பியுள்ளது. நடன திறமையால் கவனம் ஈர்க்கும் ஸ்ரீலீலாவை, தமிழில் எப்போது பார்க்க போகிறோம் என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர். ஒரு படத்திற்கு 1 கோடி வாங்கும் நடிகைகள் மத்தியில் இவர் ஒரு பாடலுக்கு நடனமாட 2 கோடி வாங்குகிறார். ‘பராசக்தி’ வெளியானால் கண்டிப்பாக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறுவார் என்கிறார்கள்.

error: Content is protected !!