News April 3, 2024
இன்றுடன் ஓய்வு பெறுகிறார் மன்மோகன் சிங்

நாடு முழுவதும் 54 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவி இன்றுடன் நிறைவடைகிறது. அதில், மன்மோகன் சிங்கின் 33 ஆண்டு கால நாடாளுமன்ற பதவியும் முடிவுக்கு வருகிறது. 1991-2019ஆம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019ஆம் ஆண்டில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும் மன்மோகன் சிங் மாநிலங்களவைக்கு சென்றுள்ளார். மன்மோகன் சிங் ஓய்வைத் தொடர்ந்து, ராஜஸ்தான் எம்.பி.யாக சோனியா காந்தி பதவியேற்கிறார்.
Similar News
News January 13, 2026
ELECTION: மீண்டும் கோவையில் களமிறங்குகிறாரா கமல்?

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, கமல்ஹாசனின் மநீம கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாம். கடந்த முறை போலவே கமல்ஹாசன் மீண்டும் கோவை தொகுதியில் களமிறங்குவார் என கூறப்படுகிறது. அதேநேரத்தில், மநீம வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என்கின்றனர் திமுகவினர்.
News January 13, 2026
ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் மர்ம கோயில்!

ம.பி.,யில் பன்னா மாவட்டத்தில் உள்ள அஜய்கர் கோட்டையில் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் ஒன்று உள்ளது. இது ஆண்டுக்கு ஒருமுறை மகர சங்கராந்திக்கு மட்டும் திறக்கப்படும். இங்கு நிரந்தர சிலைகள் இல்லை. இந்த கோயில் அமைந்துள்ள கோட்டையில் சீல் வைக்கப்பட்ட பல ரகசிய சுரங்கங்கள் உள்ளன. இரவு நேரங்களில் தாந்திரீக சடங்குகளை செய்ய பலர் இக்கோட்டைக்கு செல்வதாக கூறப்படுவதால் மர்மமான கோயிலாக இது உள்ளது.
News January 13, 2026
இனி பாகிஸ்தானை தொட்டால் 3 நாடுகள் தாக்கும்!

<<17745829>>பாகிஸ்தான் – சவுதி<<>> இடையிலான ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இணைய துருக்கி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்மூலம் இஸ்லாமிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பை உருவாக்க முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் படி, ஏதேனும் ஒரு நாடு மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது மற்ற 2 நாடுகளின் மீதான தாக்குதலாக கருதப்பட்டு, 3 நாடுகளும் இணைந்து எதிர் தாக்குதலில் ஈடுபடும்.


