News December 28, 2024
விடைபெறுகிறார் மன்மோகன் சிங்!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு இன்று காலை 11.45 மணிக்கு டெல்லியில் உள்ள நிகம்போத் காட்டில் நடைபெற உள்ளது. இறுதிச் சடங்குகளை ராணுவ மரியாதையுடன் நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. முதலில் அவரது உடல் அவரின் இல்லத்தில் இருந்து காங்கிரஸ் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மக்கள் பார்வையிடுவதற்காக சிறிது நேரம் அங்கே வைக்கப்படுகிறது. பின்னர் நிகம்போத் காட் கொண்டு செல்லப்படுகிறது.
Similar News
News March 5, 2026
விடுமுறை.. நாளை முதல் 3 நாள்களுக்கு அரசு அறிவிப்பு

சனிப்பெயர்ச்சி (மார்ச் 6), வார விடுமுறை நாள்களையொட்டி நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல வேண்டுமா? உங்களுக்காகவே அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளை முதல் 3 நாள்களுக்கு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுவரை 10,000-க்கும் அதிகமானோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். TNSTC செயலி, இணையதளத்தில் இப்போதே டிக்கெட் புக் பண்ணுங்க!
News March 5, 2026
T20 WC: இந்திய அணி பேட்டிங்!

பெரும் பரபரப்புக்கிடையே வான்கடேவில் நடக்கும் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய உள்ள இந்திய அணி எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்குகிறது. இரண்டு அணிகளும் சமபலத்துடன் உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 5, 2026
தவெகவில் அதிரடி மாற்றம்.. விஜய் அறிவிப்பு

தவெகவில் மகளிருக்கான வாய்ப்புகளை விரிவுப்படுத்தும் வகையில் மாநில அளவிலான 11 நிர்வாகிகளை புதிதாக விஜய் நியமித்துள்ளார். அந்த வகையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஸ்பூர்த்தி அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், 10 இணை ஒருங்கிணைப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தவெகவின் மகளிர் படையின் செயல்பாடுகள் மற்ற கட்சிகளுக்கு சிம்ம சொப்பமானமாக விளங்குவதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.


