News March 19, 2024
ரூ.200 கோடி வசூலித்த மஞ்சும்மெல் பாய்ஸ்

உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து, அதிக வசூல் செய்த முதல் மலையாள படம் எனும் வரலாற்று சாதனையை மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் படைத்துள்ளது. கடந்த மாதம் வெளியான அந்தப் படம், 12 நாள்களில் ரூ.100 கோடி வசூலித்தது. இதையடுத்து 26 நாள்களில் ரூ.200 கோடி வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் அந்தப் படம் ரூ.50 கோடி வசூலித்துள்ளது.
Similar News
News September 15, 2025
திருப்பூரில் 12 வயது சிறுவன் பரிதாபமாக பலி!

திருப்பூர்: காங்கேயம் அருகே அரசம்பாளையம் தேங்காய் களத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சாபூர்அலி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது 12 வயது மகன் நேற்று(செப்.14) அப்பகுதியில் விளையாடிய போது, கேட் கழன்று சிறுவன் மீது விழுந்ததில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News September 15, 2025
BREAKING: வங்கிக் கணக்கில் ₹1,000 வந்தது

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை(KMUT) திட்டத்தின் 25-வது தவணை ₹1,000 சற்றுமுன் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. 1.15 கோடி பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டதாக அரசு கூறியுள்ளது. மேலும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மூலம் விடுபட்ட நபர்களிடம் இருந்து இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அவை பரிசீலனை நிலையில் உள்ளது. அவர்களுக்கு ஓரிரு மாதங்களில் வழங்கப்படும் என உதயநிதி கூறியிருந்தார்.
News September 15, 2025
PHOTOS: கண்களை கவரும் கலர்புல் தெருக்கள்

உலகளவில் மிகவும் வண்ணமயமான, கண்களை கவரும் 10 தெருக்களின் புகைப்படங்களை மேலே வழங்கியுள்ளோம். ஒவ்வொன்றாக swipe செய்து பாருங்க. இதேபோல், நீங்கள் நேரில் பார்த்த கலர்புல் தெரு அல்லது இடங்களை கமெண்ட் பண்ணுங்க. மேலும், இதை உங்க நண்பர்களுக்கு share செய்து, அவர்களையும் கமெண்ட் செய்ய செல்லுங்க.