News March 17, 2024
200 கோடியை நெருங்கும் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’

சமீபத்தில் வெளியான மலையாளப் படமான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ வசூலில் கலக்கி வருகிறது. இப்படம் உலகம் முழுவதிலும் சேர்த்து ரூ.200 கோடியை நெருங்கியதுடன், அதிகம் வசூலித்த முதல் மலையாளப்படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் ரூ.200 கோடியைத் தாண்டும் எனத் தெரிகிறது.
Similar News
News April 5, 2025
அண்ணாமலையின் அடுத்த திட்டம்?

பாஜக தலைவர் பதவிக்கான ரேஸில் தான் இல்லை என அண்ணாமலை கூறிய பிறகு, அடுத்தது என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவருக்கு மத்தியில் இணையமைச்சர் பதவி வழங்கத் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால், நான் டெல்லி செல்ல மாட்டேன் தமிழகத்திலேயே இருப்பேன் என்றும் கூறியுள்ளார். இதனிடையே மோடி நாளை தமிழகம் வந்து சென்றபிறகு ரஜினி பாணியில் இமயமலைக்கு ஆன்மீக பயணம் செல்ல உள்ளாராம்.
News April 5, 2025
‘ஜனநாயகன்’ படத்திற்கு மே 15 டார்கெட்

‘ஜனநாயகன்’ ஷூட்டிங்கை மே 15ஆம் தேதிக்குள் முடிக்க இயக்குநர் எச்.வினோத் திட்டமிட்டுள்ளார். கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க தயாராகும் வினோத், அதையடுத்து பாடல் காட்சிகளை படமாக்க வெளிநாடு செல்ல முடிவு செய்துள்ளாராம். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்ததும், ஜூன் மாதம் முதல் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடுகிறார். தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் சென்று மக்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News April 5, 2025
இன்று தேசிய கடல்சார் தினம்…

தேசிய கடல்சார் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றும் கடல்சார் துறையை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5 ஆம் தேதி கடல்சார் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1919ல் இதே நாளில் தான் இந்தியாவின் முதல் நீராவிக் கப்பல் எஸ்.எஸ்.லாயல்டி மும்பையில் இருந்து லண்டனுக்கு சென்றது. அதன் நினைவாக 1964 முதல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.