News September 29, 2024
‘தளபதி 69’-ல் இணையும் மஞ்சு வாரியர்?

‘தளபதி 69’-ல் மஞ்சு வாரியர் நடிக்க உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இயக்குநர் H.வினோத்துடன் மீண்டும் இணைய உள்ளதாக மஞ்சு வாரியர் சமீபத்திய பேட்டியில் மறைமுகமாகத் தெரிவித்ததுதான் இந்த பரபரப்புக்கு காரணம். ‘துணிவு’ படப்பிடிப்பின் போது, தனது அடுத்த படத்தில் முழு நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தும் வகையிலான கதாபாத்திரத்தை வழங்குவதாக வினோத் கூறியிருந்ததை அவர் பேட்டியில் பகிர்ந்திருந்தார்.
Similar News
News August 21, 2025
இன்னும் சற்றுநேரத்தில் … ரெடியா இருங்க

தவெக மாநாடு சற்றுநேரத்தில் தொடங்கவிருக்கிறது. நேற்று இரவு முதலே மாநாட்டு திடலில் வெயிலையும் பொருட்படுத்தாமல், விஜய்யை காண தொண்டர்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர். வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால், 4 மணிக்கு பதில் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே (3 மணிக்கு) மாநாட்டு மேடைக்கு விஜய் வருகிறார். இதன் காரணமாக தற்போது ஆதவ், என்.ஆனந்த் வாக்கி டாக்கியுடன் மாநாடு மேடைக்கு வந்து ஆய்வு செய்கின்றனர்.
News August 21, 2025
அதிமுகவிற்கு இரட்டை நிலைப்பாடு சாதாரணமே: CM

நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்த, மத்திய அரசு கொண்டு வரும் கருப்பு சட்டங்களை திமுக எதிர்க்கும் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். PM, CM பதவி பறிப்பு மசோதா, குடியுரிமை திருத்தச் சட்டம், SIR ஆகியவற்றை தாங்கள் எதிர்த்ததாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். சென்னையில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், இரட்டை நிலைப்பாடு என்பது அதிமுகவுக்கு சாதாரணமே என்று CM விமர்சித்துள்ளார்.
News August 21, 2025
பொதுச்செயலாளர் பதவி வழக்கு.. EPSக்கு பின்னடைவு!

அதிமுக பொதுச் செயலாளராக EPS தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்குக்கு தடை விதித்த உத்தரவை ஐகோர்ட் வாபஸ் வாங்கியுள்ளது. EPS-ன் மனுவை ஏற்கெனவே உரிமையில் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது ஐகோர்ட்டும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், இது அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.