News November 18, 2024
சென்னையில் மீண்டும் மாஞ்சா நூல் கொடூரம்
சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தில் பைக்கில் தந்தையுடன் சென்று கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை புகழ்வேந்தனின் கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்து காயம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை கொடிகட்டி பறந்த பட்டம் விடும் கலாசாரம், தற்போது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனாலும், தடையை மீறி மாஞ்சா நூலை பயன்படுத்திய 4 மாணவர்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Similar News
News November 20, 2024
கஸ்தூரிக்கு கருணை: நீதிபதி மனைவி கோரிக்கை
நடிகை கஸ்தூரிக்கு ஆதரவாக சென்னை ஐகோர்ட் நீதிபதி சுவாமிநாதனின் மனைவி காமாட்சி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், கஸ்தூரிக்கு ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை இருக்கிறது. சிறப்புக் குழந்தையை கஸ்தூரி தனி ஆளாக போராடி வளர்த்து வருகிறார். எனவே, குழந்தையின் நிலையை கருத்தில்கொண்டு அவரது ஜாமீன் மனுவை கருணையோடு அணுக வேண்டும்” என காமாட்சி கோரிக்கை விடுத்துள்ளார்.
News November 20, 2024
விவாகரத்தை A.R.ரஹ்மான் எப்படி அறிவித்தார் தெரியுமா?
தனது விவாகரத்து செய்தியை ஏ.ஆர்.ரஹ்மான் ஹேஷ்டேக் போட்டு அறிவித்த விவகாரம் இணையவாசிகளால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. தனது மனைவி சாய்ரா பானுவை பிரிவதாக X தளத்தில் அறிவித்த ரஹ்மான், அதே போஸ்டில் #arrsairaabreakup என ஹேஷ்டேக் போட்டிருந்தார். வழக்கமாக, ஒரு விஷயத்தைப் பற்றி மக்களை அதிகமாக பேச வைக்கத்தான் ஹேஷ்டேக்-ஐ பயன்படுத்துவர். அது தெரியாமல் ரஹ்மான் செய்த விஷயம் கேலிப் பொருளாகியிருக்கிறது.
News November 20, 2024
14 வருடங்களுக்கு பிறகு இந்தியா வரும் மெஸ்ஸி
கால்பந்தாட்டத்தில் அதிக ரசிகர்களை கொண்டவர் மெஸ்ஸி. கால்பந்தாட்டத்தின் உச்சம் தொட்ட மெஸ்ஸி, சர்வதேச போட்டி ஒன்றில் விளையாட அடுத்த ஆண்டு இந்தியா வரவுள்ளார் என்ற இன்ப அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் கேரளா விளையாட்டு துறை அமைச்சர். 14 வருடங்களுக்கு பிறகு இந்தியா மெஸ்ஸி வரவுள்ள போட்டி எப்போது என்ற தேதி இன்னும் தெரிவிக்கவில்லை என்றாலும், waiting’-லயே வெறி ஏறுதே…