News September 14, 2024
CWC நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும் மணிமேகலை அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். குக்காக இருக்கும் மற்றொரு தொகுப்பாளர், தன்னுடைய பணியில் ஆதிக்கம் செலுத்துவதாகவும், பணம், புகழை விட சுயமரியாதையே முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் யாரை மறைமுகமாக தாக்குகிறார் என நீங்கள் நினைக்கிறீர்கள்? கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News December 19, 2025
டி20 WC அணியின் லிஸ்ட் ரெடி!

டி20 WC அடுத்த ஆண்டு பிப்.7-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியில் வழக்கம் போல் சூர்யா கேப்டனாகவும், கில் துணை கேப்டனாகவும் இருக்கவே 100% வாய்ப்புள்ளது. அதேசமயம் தென்னாப்பிரிக்கா தொடரில் விளையாடும் வீரர்களில் ஒருவர் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. இஷான், ரிங்கு, பண்ட் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் எனவும் தெரிகிறது.
News December 19, 2025
அனுமன் ஜெயந்தி.. இதை செய்தால் வெற்றி மேல் வெற்றி!

இன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. கோயிலுக்கு சென்று அவருக்கு 27 வெற்றிலைகளை மாலையாக கோர்த்து சாற்றி வழிபட்டால், வாழ்வில் அனைத்து தடைகளும் விலகும் என்பது ஐதீகம். மேலும், துளசி மாலை சாற்றி, அவல், பொரி, வெண்ணெய், பானகம், பழங்கள், வாழைப்பழம் போன்றவைகளை நைவேத்தியமாக படைத்து வழிபடுங்கள். அனுமனுக்கு பெண்கள் வெற்றிலைகளை கொண்ட மலையை சாற்றி வழிபட்டால், விரைவில் திருமணம் நடக்கும் என கூறப்படுகிறது.
News December 19, 2025
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

சர்வதேச சந்தையில் கடந்த சில நாள்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் இன்று(டிச.19) 1 அவுன்ஸ்(28g) $11.30 குறைந்து $4,330 ஆக உள்ளது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ்-க்கு $1.06 குறைந்து $65.54-க்கு விற்பனையாகிறது. இதன் தாக்கத்தால் இந்திய சந்தையில் உயர்ந்து வந்த தங்கத்தின் விலை(தற்போது சவரன் ₹99,520) இன்று கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.


